குளிர்கால சரும பராமரிப்பு முறைகள்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குளிர்கால சரும பராமரிப்பு முறைகள்!

குளிர்கால சரும பராமரிப்பு முறைகள்!


குளிர் காலத்தில் நமது சருமம், முடி போன்றவை வெகுவாக பாதிக்கப்படுகின்றன. சரும ஆரோக்கியம் என்பது வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை மட்டுமல்ல; 

நாம் உண்ணக் கூடிய உணவையும் பொருத்ததாகும். முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. குறிப்பாக, சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிப்பதில் நீருக்கு முக்கியப் பங்கு உள்ளது. 

தினமும் உணவில், அதிக அளவில் பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்வது அவசியம். குளிர் அதிகமாக உள்ள நேரத்தில், வெளியே செல்லும் போது, வெண்ணிற ஆடைகளை அணிய வேண்டும். குளிருக்கு இதமாக அதிக நேரம் நெருப்புக்கு அருகில் இருந்தால், உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 

குளிர் காலத்தில் சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்க, சோப்புக்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தலாம். தோல் வறண்டு போதல் மற்றும் தோல் வெடிப்பதை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்,தேங்காய் எண்ணெய்யை உடலில் தேய்க்கலாம். 

குளித்து முடித்தவுடன் மாய்ஸரைசர்கள், கிரீம்கள் தடவ வேண்டியது அவசியம். குளிக்க பயன்படுத்தும் நீரில், சில துளிகள் தேங்காய் எண்ணெய்யைச் சேர்க்கலாம். குளிப்பதால் ஏற்படக் கூடிய ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இழப்பை ஈடு செய்ய உதவும். 

மிகவும் சூடான நீரில் குளிக்கும் போது உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும். குளிர் காலத்தில், பலருக்கும் ஏற்படும் மற்றொரு பிரச்னை உதடு வெடிப்பு. இதற்கு, உதடு வெடிப்பிற்கான எண்ணெய் அல்லது வெண்ணெய்யை உதட்டில் தடவலாம். 

அதனால், வெடிப்பு குணமாவதுடன், உதட்டுக்கு கூடுதல் மென்மை கிடைக்கும். வறண்ட சருமம் உள்ளவர்கள் தினமும் குளிக்கச் செல்லும் முன் சிறிது தயிரை உடம்பில் தடவி வைத்திருந்து பின் வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும். 

குளிர் காலத்தில் கடுகு எண்ணெய்யை உடலில் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின் வெதுவெதுப்பான நீரில் குளித்தால், வறண்ட சருமம் சரியாகும். குளிருக்கும் இதமாக இருப்பதுடன் எண்ணெய் வாசனையும் அடிக்காது. அதே வேளையில், குளிர்ந்த நீரில் குளிக்கவே கூடாது. 

தோலில் சுரக்கும் திரவங்களால், தோல் மென்மையாகவும், ஈரப்பசையுடனும் உள்ளது. ஆனால், குளிர்காலத்தில் ஈரப்பசை குறைவதாலும், உடலில் ஏற்படும் மாற்றத்தாலும், தோல் வறண்டுவிடும்; சிலருக்கு தோல் சொர சொரவென இருக்கும். 

தோல் வறட்சி உள்ளவர்கள், அடிக்கடி நீரால் உடலை கழுவுவதோ, குளிப்பதோ கூடாது, அடிக்கடி செய்தால், ஏற்கெனவே குறைவாகவுள்ள ஈரப்பசை மேலும் குறைந்துவிடும். சோப்பு போட்டு குளித்தால் இன்னும் அதிகமாக வறட்சி ஏற்படும். 

எனவே, சோப்புக்கு மாற்றாக கடலை மாவை பயன்படுத்தலாம். மிதமான சூட்டிலுள்ள நீரில் குளிப்பது வறட்சியான தோலுக்கு இதமானது. இயல்பாகவே வறண்ட தோலுள்ளவர்கள், குளிர்காலத்தில் வறட்சி பிரச்னைக்கு உள்ளாகுவோர், இதற்கென உள்ள பிரத்யேகமான கிரீம்களை பயன்படுத்தலாம். 

பாரபின் எண்ணெய், வாசலின் பயன்படுத்தலாம். மாலையில் குளிர்ச்சியான நேரத்தில் காலுறைகளை தவறாமல் அணிதல், வெடிப்பின் தன்மையைக் குறைக்கும். அதுபோல் செருப்புக்கு பதிலாக கட் ஷூ போன்றவற்றை அணியலாம். உணவில் தயிர், முட்டை, மீன், நல்லெண்ணெய் ஆகியவை அதிகளவில் பயன்படுத்தவேண்டும்.


Winter Skin Care: 

Our skin and hair are severely affected during the winter season. Skin health is not just outside treatment; The food we eat is also relevant. Proper nutritious food helps the skin stay healthy. In particular, water plays an important role in maintaining skin moisture. 

Include a large amount of fruits and vegetables in your daily diet. When out in the cold, wear warm clothes when going out. If the fire is too close to the fire, it can damage the body. To maintain the softness and flexibility of the skin during the cold season, you can use peanut flour instead of soap. 

To avoid dryness and skin rash, you can rub coconut oil on your body shortly before taking a bath. After the bath, apply moisturizers and creams. In the bath water, add a few drops of coconut oil. The moisture caused by the bath helps to compensate for the loss of oil glue. 

Bathing in warm water will diminish the body's natural oil glue. During the cold season, another problem that many people have is lip blasts. For this, you can apply lipstick oil or butter to the lips. So, the eruption will heal and the lips will get extra softness.

For people with dry skin, apply a little yoghurt before bathing and bathing with warm water. Keep the mustard oil in the cold for a while and then warm it in warm water and dry skin. It is a bath and does not smell of oil. At the same time, you should not bathe in cold water. 

The skin is soft and moisturized by the secretions of the skin. But due to the lack of moisture in the winter and a change in the body, the skin becomes dry; For some people it is a skin rash. People with skin dryness should not wash or bathe the body with water frequently, and if done frequently, the moisture content that is already low will be reduced. 

Bathing with soap will cause more dryness. Therefore, you can use seaweed as an alternative to soap. Bathing in moderately warm water is best for dry skin. For people with naturally dry skin and those who are prone to dryness in the winter, you can use special creams. 

Paraffin oil, Vaseline can be used. Wearing stockings regularly in the evenings during the evening will reduce the risk of explosion. You can wear shoes like shoes instead of shoes. Eat more yogurt, eggs, fish and kerosene in your diet.

No comments:

Post a Comment

Please Comment