ஆங்கில மொழித் திறனை வளர்க்க மாணவர்களுக்குப் பயிற்சி புத்தகம் வழங்கும் மேற்கு வங்க அரசு
மேற்கு வங்க அரசு அம்மாநில மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்க்க நேற்று பயிற்சி புத்தகங்கள் வழங்கி உள்ளது.
தற்போதைய நிலையில் போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறன் அவசியமாக உள்ளது.
இந்தி மற்றும் மாநில மொழிகளில் இந்த போட்டித் தேர்வுகள் நடைபெற்ற போதிலும் பெரும்பாலான தேர்வுகளில் ஆங்கில மொழித் திறன் தேர்வும் இடம் பெற்றுள்ளது. இதனால் மேற்கு வங்க மாநிலம் தங்கள் மாநில மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறனை வளர்க்க முடிவு செய்தது.
இது குறித்து அம்மாநில பாடத்திட்டக் குழுத் தலைவர் அபிக் மஜூம்தார், 'மாணவர்கள் பலர் பயத்தின் காரணமாக ஆங்கில மொழியைக் கற்கத் தயங்கி வருகின்றனர். அவர்களின் பயத்தைப் போக்கி எளிதாக ஆங்கில மொழியைக் கற்று மொழித் திறனை வளர்த்துக் கொள்ள அரசு உதவ முன் வந்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு நடத்தும் 80,000 பள்ளிகளில் ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இந்த பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த புத்தகத்தில் உள்ள பயிற்சிகள் மூலம் மாணவர்கள் தங்கள் ஆங்கில மொழித் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ள முடியும். சென்ற வருடம் இத்தகைய பயிற்சிப் புத்தகங்கள் 3 மற்றும் 4ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.' எனத் தெரிவித்துள்ளார்.
Government of West Bengal providing training book for students to develop English language skills
English language skills are essential for students writing competitive exams at the current level. Although the competition is held in Hindi and state languages, English language proficiency is also available in most of the exams.
Thus West Bengal State decided to develop English language skills for their state students. Speaking about this, Amikim Majumdar, Chairman of the Intermediate Curriculum Committee said,
“Many students are reluctant to learn English because of fear. The government has come forward to help them overcome their fears and learn English easily. As part of this, students have been given English training books.
The training books have been provided to students in grades five and six in 80,000 state-run schools. Through the exercises in this book, students can develop their English language skills. Last year, such training books were provided to students in grades 3 and 4. ' Has said.

No comments:
Post a Comment
Please Comment