வேறு வங்கி ஏடிஎம்களில் இருந்தும் உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம்! | புது வசதி அறிமுகம்!
பணத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய கால்கடுக்க நின்றிருந்த காலம் போய் ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை டெபாசிட் செய்யும் வசதியை சில வங்கிகள் கொண்டுவந்தன.
ஆனால் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அதன் சம்மந்தப்பட்ட வங்கியின் டெபாசிட் இயந்திரங்களில் மட்டும்தான் பணத்தைச் செலுத்த முடியும் என்ற சூழல் நிலவி வந்தது.
இதனால் குறிப்பிட்ட வங்கியின் பணம் போடும் இயந்திரங்களைத் தேடிச் சென்று டெபாசிட் செய்ய வேண்டியிருந்தது. இதனால், குறிப்பிட்ட அளவு மக்களே இதனால் பயனடைந்தனர். அனைத்துத் தரப்பினருக்கும் இந்த வசதி சென்று சேரவில்லை.
அவசரத்திற்கு கூட கையில் இருக்கும் பணத்தை வங்கியில் செலுத்த முடியவில்லை.இந்த சூழலை மாற்ற ஒருசில வங்கிகளில் மட்டும் பிற வங்கிக் கணக்குகளிலும் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தை நிறுவினற்.
இருந்தாலும் அது நாடு முழுவதும் பயனுக்கு இன்னும் வராமல் இருந்தது. இந்நிலையில், விரைவில் அனைத்து ஏடிஎம் எந்திரங்களிலும் மற்ற வங்கிகளைச் சேர்ந்த வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பும் வசதி ஏற்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வரை 14 வங்கிகளில் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்னும் சுமார் 30,000 ஏடிஎம்களில் இந்த வசதி வரவுள்ளதாக கூறப்படுகிறது. இப்பணியில் இந்திய தேசிய பணம் வழங்கு கழகம் (NPCI) ஈடுபட்டுள்ளது.
இப்படி பரிவர்த்தனை செய்யப்படும்போது சேவை வரியாக ரூ.10,000க்கு 25 ரூபாயும், ரூ.10,000க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Deposit your bank account from other bank ATMs! | Introducing New Feature!
Some banks have come up with the option to deposit cash in ATM machines after a long time. But there was a situation where a particular bank account could only be deposited in the bank's deposit machines. This required them to search and deposit the particular bank's payment machines.
Thus, a certain number of people benefited. The facility is not accessible to all parties. In order to change this situation, only a few banks have installed a cash deposit machine in other bank accounts. However, it was still to no avail across the country.
In this case, all the ATM machines will soon be able to send money to the bank accounts of other banks, reports say. The facility has been brought to 14 banks to date. The facility is said to be continuing with more than 30,000 ATMs.
Indian National Lending Corporation (NPCI) is involved in this work. The transaction will be charged at Rs. 25 per service tax and Rs. 50 per transactions over Rs. 10,000.
No comments:
Post a Comment
Please Comment