நாசா போயிட்டு வாம்மா பேஷா! ஏழை மாணவிக்கு கவுரவம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நாசா போயிட்டு வாம்மா பேஷா! ஏழை மாணவிக்கு கவுரவம்

நாசா போயிட்டு வாம்மா பேஷா! ஏழை மாணவிக்கு கவுரவம்





கோவை:நாசா செல்லும் கூலி தொழிலாளி மகளுக்கு பாராட்டு தெரிவித்த, கோவை மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார், புத்தகம் பரிசு வழங்கி கவுரவித்தார்.நாமக்கல் அடுத்த கருப்பட்டிப்பாளையத்தை சேர்ந்த, கூலி தொழிலாளி 

வெங்கடாஜலம்-சசிகலா தம்பதியரின் இரண்டாவது மகள் அபிநயா,13; அங்குள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்.கடந்த நவம்பரில், நாசா செல்வதற்கான, 'கோ 4 குரு' என்ற ஆன்லைன் தேர்வில் பங்கேற்று, சிறந்த திறனாளர் சான்று பெற்றார். 

அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்தை, பார்வையிடுவதற்கான அனுமதியும் கிடைத்தது.ஆனால், முதல் மூன்று இடங்களுக்குள் பெறாததால், சொந்த செலவில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 

விண்வெளி மையத்தை பார்வையிட்டு, அங்கு நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்றால், பிளஸ் 2 முடித்த பின், நாசாவுக்குரிய பல்கலையில் இலவச சேர்க்கை கிடைக்கும்.இதை கேள்விப்பட்ட அமைச்சர் தங்கமணி, அம்மாணவியை அழைத்து, நாசா செல்வதற்கு ரூ.2 லட்சம் வழங்கினார்.

பாஸ்போர்ட் வாங்குவதற்காக கோவை வந்த மாணவ அபிநயாவை, மாநகராட்சி அலுவலகத்துக்கு வரவழைத்து, பாராட்டு தெரிவித்து, புத்தகங்கள் வழங்கி கவுரவித்தார், கமிஷனர் ஷ்ரவன்குமார்.

உயர்கல்வி கற்க உதவி தேவைப்பட்டால் அணுகுமாறு, கமிஷனரும், துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமியும் தெரிவித்தனர். தேவையான புத்தகங்கள் வாங்க, பட்டியலின கூட்டுக்குழு சார்பில், ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.


NASA Goes Whamma Pasha! Honor the poor student


kovai: Poor corporation commissioner Shravankumar honored the daughter of NASA wage laborer. In November of last year, he took the 'Go4 Guru' online exam to go to NASA and was awarded the top performer. 


Permission was granted to visit the NASA space station in the United States. If you visit the space center and win the exam, you will get a free admission to the NASA campus after completing Plus Two. 

Abhiyanaya, a student who came to Coimbatore to buy a passport, came to the Municipal Office, congratulated and handed over the books, said Commissioner Shravan Kumar. On behalf of the listed group, Rs.10 Thousand

No comments:

Post a Comment

Please Comment