Census 2021 | மக்கள் தொகை கணக்கெடுப்பு - டாய்லெட் முதல் இண்டர்நெட் வரை உங்களிடம் கேட்கப்பட உள்ள 31 கேள்விகள்
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், குடிமக்களிடம் கேட்கப்பட உள்ள 31 கேள்விகள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
கடந்த 2010-ம் ஆண்டில் கணக்கெடுப்பு தொடங்கி, 2011-ல் மக்கள் தொகை பதிவேடு வெளியிடப்பட்டது. அடுத்த ஆண்டு, 2021-ல் மக்கள் தொகை பதிவேடு வெளியிடப்பட வேண்டும் என்ற நிலையில், வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதி இதற்கான பணிகள் தொடங்குகின்றன.
மத்திய கணக்கெடுப்பு ஆணையம் இதற்கான பணியை மேற்கொள்ள இருக்கிறது. ஏப்ரல் 1-ல் தொடங்கும் கணக்கெடுப்பு பணி, செப்டம்பர் 30-ம் தேதி வரை நடக்கிறது. காடு, மலை என்று நாட்டில் மக்கள் வசிக்கும் அனைத்து இடங்களிலும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட இருக்கிறது.
முந்தைய கணக்கெடுப்புகளை ஒப்பிடும் போது, இம்முறை முழுவதும் டிஜிட்டல் உபகரணங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதனால், விரைவாக கணக்கெடுப்பு பணி முடிவடையும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கணக்கெடுப்பு பணியின் போது குடிமக்களிடம் 31 தகவல்கள் கேட்கப்பட இருக்கின்றன.
உள்ளாட்சி நிர்வாகம் ஒதுக்கிய வீட்டின் எண், கணகெடுப்புக்கான வீட்டின் எண், வீட்டின் கட்டுமானம், வீட்டின் நிலை, வீட்டில் தங்கியுள்ளவர்கள் விபரம், குடும்பத் தலைவரின் பெயர், குடும்பத் தலைவரின் பாலினம், குடும்பத் தலைவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவரா?,
வீட்டின் உரிமையாளர் நிலை, வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, வீட்டில் உள்ள திருமணமானவர்களின் எண்ணிக்கை, முக்கிய குடிநீர் ஆதாரம், குடிநீர் இணைப்பு வழிகள், மின் இணைப்பு விபரம், கழிவறை வசதி, கழிவறையின் வகை, கழிவு நீர் வடிகால், குளியளறை,
சமயலறை வசதி மற்றும் எல்.பி.ஜி இணைப்பு, சமயலுக்கான எரிபொருள், ரேடியோ வசதி, டிவி வசதி, இணைய வசதி, லேப்டாப்/கம்ப்யூட்டர், தொலைபேசி / செல்பேசி / ஸ்மார்ட்போன், சைக்கிள் / ஸ்கூட்டர் / பைக் / மொபெட், கார் / ஜீப் / வேன், செல்போன் எண் ஆகிய தகவல்கள் பெறப்படுகிறது.
Census 2021 | Census - 31 Questions to Ask From the Toilet to the Internet
As the Census process begins on April 1, 31 questions have been released to citizens. National census work is done once every ten years. The census began in 2010 and was released in 2011. The work is due to begin on the first of April next year, with the census to be released in 2021.
The Central Census Commission is to carry out the work. The survey, which begins on April 1, runs until September 30. The census is to be conducted in all areas of the country, such as forest and mountain. Thus, it is said that the survey work will be completed quickly.
At this stage, citizens are required to request 31 information during the survey process. Details of house allocated by local administration, house number for the survey, construction of the house, status of the house, details of family members, name of head of household, sex of head of household,
household leader status, number of rooms in the house, number of married people in the house, main drinking water slowly , Drinking Water, Electricity, Toilet Facility, Toilet Type, Waste Water Drain, Bathroom, Kitchen & LBG Connection, Religious Fuel, Radio, TV, Internet, Laptop / Computer, Phone / Cell phone / smartphone, bicycle / scooter / bike / moped, car / jeep / van, cell phone number.
No comments:
Post a Comment
Please Comment