PhD படிப்பை கடுமையாக்கிய அண்ணா பல்கலைக்கழகம்! புதிய விதிமுறைகள்!
அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் வழங்கப்படும் ஆராய்ச்சிப் படிப்பின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய விதிமுறைகள் மற்றும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறது அண்ணா பல்கலைக் கழகம்.
மாற்றப்பட்ட விதிமுறைகளின் தொகுப்பு கீழ் வருமாறு,
-பிஎச்.டி மாணவா்கள் தங்களுடைய முதலாம் ஆண்டு ஆராய்ச்சிக்கான முன் அறிமுகப் பணிகளை முதுநிலை பட்ட மாணவர்களுடன் இணைந்து செய்யவேண்டும்.
-பி.எச்டி படித்து வந்த மாணவர்கள் இதுவரையில் இரண்டு ஆண்டுகள் வரையில் விடுப்பு எடுக்க அனுமதிக்கப் பட்டு வந்தது குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஓராண்டிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
கோா்ஸ் வொக் காலத்தின்போது ஆராய்ச்சி மாணவர்கள் குறைந்தபட்சம் ஓர் ஆராய்ச்சி கட்டுரையை, பட்டியலிடப்பட்ட வலைத்தளத்தில் வெளியிட வேண்டும் என இருந்த விதியும் மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல, நெறியாளர்களுக்கும் (கைடு) விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-இனி, பேராசிரியர் நிலையில் இருப்பவர்கள், பல்கலைக்கழகத்தால் பட்டியலிடப்பட்ட வெளியீடுகளில் குறைந்தபட்சம் 5 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட வேண்டும். அப்போதுதான் அவருக்கு ஆராய்ச்சி நெறியாளர் அனுமதி வழங்கப்படும்.
-இணைப் பேராசிரியர் நிலையில் இருப்பவர்கள் (Associate professor) பி.எச்டி படிப்பின்போது குறைந்தபட்சம் 3 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், உதவிப் பேராசிரியர் (Assistant Professor) நிலையில் இருப்பவர்கள் குறைந்தபட்சம் 2 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டிருக்க வேண்டும்.
அப்போதுதான் நெறியாளர் அனுமதி அளிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Anna University that has made PhD study tough! New Terms!
Anna University has been implementing various new rules and programs to improve the quality of the research course offered on behalf of Anna University. To come under the changed set of rules, PhD students must work together with Masters in their first year of pre-introductory work.
- Students who have completed PhD have been allowed to leave for two years. Currently, only one year is allowed. During Cox Vogue, the rule for research students to publish at least one research article was changed. Similarly, the rules have been announced for the regulators.
-Now, those who are in a professor position should publish at least 5 research papers in publications listed by the university. Only then will he be granted permission by the Research Director.
- Associate professor should have published at least 3 research papers during the PhD and at least 2 research papers from the assistant professor position. Only then will the regulator sanction the Anna University.

No comments:
Post a Comment
Please Comment