SBI வங்கியில் 8000 வேலை வாய்ப்புகள். 'விவரங்கள் உள்ளே'..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

SBI வங்கியில் 8000 வேலை வாய்ப்புகள். 'விவரங்கள் உள்ளே'..!

SBI வங்கியில் 8000 வேலை வாய்ப்புகள். 'விவரங்கள் உள்ளே'..!




நாடு முழுவதும் காலியாக இருக்கும் பணியிடங்களை மாநிலங்கள் வாரியாக நிரப்ப போவதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் அதிக கிளைகளுடன் இயங்கி வரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. 

இந்த நிலையில் சுமார் 8000-க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு முடித்துவிட்டு ரிசல்டிற்காக காத்திருக்கும் நபர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.sbi.co.in என்ற இணையத்திற்கு சென்று விண்ணப்பம் பெற்று கொண்டு அதனை பூர்த்தி செய்து அனுப்பிவைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



இதற்கான கடைசி தேதி ஜனவரி 26ஆம் தேதி ஆகும். இதற்கான முதல் நிலை தேர்வு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறும் எனவும், மெயின் தேர்வு ஏப்ரல் 19, 2020 நடைபெறும் எனவும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


No comments:

Post a Comment

Please Comment