வருடாந்திர அட்டவணை வெளியீடு:
ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகிறது
தேர்வு வாரியம் அறிவிப்பு
கல்வித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடத்தி தகுதியானவர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்ந்தெடுத்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் ( www.trb.tn.nic.in ) வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* தொடக்கக் கல்வித்துறையில் உள்ள 97 வட்டார கல்வி அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு அடுத்த மாதம் (பிப்ரவரி) 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
* 1,060 அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான எழுத்து தேர்வு வருகிற மே மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடக்கிறது.
* 2020-2021-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு மே மாதம் 4-ந் தேதி வெளியாகிறது. அதற்கான எழுத்து தேர்வு ஜூன் மாதம் 27 மற்றும் 28-ந் தேதிகளில் நடைபெறும்.
* 2020-2021-ம் ஆண்டுக்கான 497 முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் 1-ந் தேதியும், 2016-17-ம் ஆண்டு முதல் 2019-20-ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் காலியாக உள்ள 730 பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு ஜூலை மாதம் 9-ந் தேதியும், 2017-18-ம் ஆண்டு முதல் 2019-20-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலியாக உள்ள 572 இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கு ஜூலை மாதம் 17-ந் தேதியும் அறிவிப்பு வெளியாகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Annual Schedule Issue: Teacher Eligibility Announcement Releases in May TRB Announcement
The Teacher Recruitment Board is selecting candidates who are qualified to conduct written examinations for various vacancies in the education sector. The schedule for the current year has been published by the Teacher Selection Board on its website (www.trb.tn.nic.in). It states: -
Written Examination for 97 Regional Education Officers in Elementary Education will be held on the 15th and 16th of next month.
Written Examination for 1,060 Government Polytechnic College Lecturers will be held on the 2nd and 3rd of this month.
* Announcement of Teacher Eligibility for the Year 2020-2021 will be released on May 4. The written examination will be held on the 27th and 28th of June.
* Notification for 497 Masters Teacher Vacancies for 2020-2021 will be held on 1st July and 730 Graduate Teacher jobs vacant for the period 2016-17 to 2019-20 and 9th July 2017. From July 18 to 2019-20, 572 mid-term job vacancies will be announced on July 17.
It has been stated thus.

No comments:
Post a Comment
Please Comment