ஜியோ அசத்தல்.. wifi calling வசதி அறிமுகம்.. வாய்ஸ், வீடியோ கால்கள் இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது?
சென்னை: ஜியோ மொபைல் போன் சேவை நிறுவனம், wi-fi மூலமாக வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யக் கூடிய வசதியை சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது.
ஜியோ செல்போன் நெட்வொர்க்கை பயன்படுத்தக் கூடிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சேவை பொருந்தும், இதற்காக கூடுதலாக கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது.
சமீபத்தில், போட்டியாளரான ஏர்டெல் நிறுவனம் இதுபோன்ற சேவையை அறிமுகம் செய்தது.
ஆனால் அதில் சில நிபந்தனைகள் உண்டு. ஜியோவில் அது இல்லை.
திட்டம்
ஏர்டெல் நிபந்தனை
அதாவது, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் wi-fi நெட்வொர்க்கை பயன்படுத்தி மட்டும்தான் இதுபோன்ற அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
அதே நேரம் ஜியோ அறிமுகம் செய்துள்ள இந்த திட்டத்தின்படி எந்த ஒரு வைஃபை நிறுவனத்தின் வை-பை நெட்வொர்க்கையும் பயன்படுத்தி இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
பொது இடங்களில் வழங்கப்படக் கூடிய wi-fi நெட்வொர்க்கை கூட பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சலுகை
ஜியோ சலுகை
சராசரியாக ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு மாதம் 900 நிமிடங்கள் இலவச அழைப்புகளை கொடுக்கிறது.
அதேநேரம் இதுபோன்ற wi-fi நெட்வொர்க்கை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளும் போது, இதை நாம் மிச்சப்படுத்த முடியும். செல்போன் நெட்வொர்க் வலிமை குறைவான இடங்களிலும் அவசர தேவைகளுக்கு இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஜியோ எண்ணிலிருந்து வைஃபை அழைப்பை எவ்வாறு செய்வது?
* உங்கள் செல்போனில் வைஃபை அழைப்பு ஆப்ஷன் இருப்பது அவசியம். எந்த மாதிரி ஹெட்செட்கள் இந்த வசதி கொண்டவை என்பதை ஜியோ வெப்சைட்டில் அறியலாம்
* தொலைபேசி செட்டிங்கிற்கு செல்லவும்
* வைஃபை அழைப்பு ஆப்ஷனைத் தேடுங்கள்
* வைஃபை அழைப்பு ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்
* நீங்கள் VoLTE மற்றும் Wi-Fi அழைப்பு இரண்டையும் சுவிட்ச் ஆன் செய்த நிலையிலேயே வைக்க வேண்டும்.
* வழக்கமாக தொலைபேசி அழைப்பை மேற்கொள்வது போலவே, இப்போதும் நீங்கள் போன் செய்யலாம்
* சிறந்த தரமான அழைப்புக்கு உங்கள் தொலைபேசி வைஃபை மற்றும் செல்லுலார் நெட்வொர்க்கிற்கு இடையில் தானாகவே மாறிக்கொள்ளும்.
நீங்கள் எதுவும் செய்ய தேவையில்லைஜியோ வைஃபை அழைப்பின் கட்டணங்கள் என்ன?
ஜியோவின் அறிவிப்புப்படி, அழைப்பு வசதி இலவசம். இது நீங்கள் ஏற்கனவே, இருக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்திய எண்களுக்கான எந்தவொரு அழைப்பும் இலவசம், ஆனால் சர்வதேச எண்களுக்கான அழைப்புகள் சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணங்களின்படி வசூலிக்கப்படும். ரோமிங்கின் போதும் நீங்கள் வைஃபை அழைப்பை மேற்கொள்ளலாம்.
Jio Wave .. Introduction of wifi calling facility .. Voice, video legs free!
How to Activate Chennai: Geo mobile phone company has introduced voice and video calling capabilities through wi-fi in many cities including Chennai. This service is applicable to all customers who use the Jio cellphone network, at no additional cost.
Recently, rival Airtel introduced a similar service. But it does have some conditions. In Geo it is not. Such calls can only be made using the Airtel condition, namely the Airtel Extreme Fiber wi-fi network.
At the same time, Jio has introduced this program which allows users to make free calls using any WiFi company's Wi-Fi network. Even the wi-fi network that can be provided in public areas can be utilized. Offer Jio Offer On average Jio gives its customers 900 minutes of free calls per month.
At the same time, we can save this when making calls using a wi-fi network. It can be used for emergency purposes where the cell phone network is weak. How to make wifi call from Geo number?
* Wi-Fi Calling option on your cell phone. jo WebSite lets you know what kind of headsets this feature is available
* Go to Phone Setting
* Find WiFi Call Option
* Select WiFi Call Option
* You need to keep both VoLTE and Wi-Fi calls switched on.
* Just like you usually make a phone call, you can still call your phone
* For better quality calls, your phone automatically switches between Wi-Fi and cellular networks.
You don't need to do anything. According to Geo's announcement, the calling facility is free. This is already included as part of your existing project.
Any calls for Indian numbers are free, but international numbers will be charged for international calls. You can make WiFi calls while roaming.


No comments:
Post a Comment
Please Comment