10ம் வகுப்பு தேர்ச்சி போதும், ரயில்வே துறையில் அப்ரென்டிஷிப் வேலை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

10ம் வகுப்பு தேர்ச்சி போதும், ரயில்வே துறையில் அப்ரென்டிஷிப் வேலை

10ம் வகுப்பு தேர்ச்சி போதும், ரயில்வே துறையில் அப்ரென்டிஷிப் வேலை



ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (ஆர்.ஆர்.சி) 2,792 அப்ரென்டிஷிப் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . இதற்கான விண்ணப்ப செயல்முறை வரும் 14 ஆம் தேதி முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்த எண்ணிக்கை: 2,792 

ஜமல்பூர் வொர்க்ஷாப் - 684 

ஹவுரா பிரிவு - 659 

சீல்தா பிரிவு - 526 

அசன்சோல் பிரிவு - 412 

காஞ்ச்ரபரா வொர்க்ஷாப் - 206 

லிலுவா வொர்க்ஷாப் - 204 

மால்டா பிரிவு - 101 

யார் விண்ணபிக்கலாம்: இந்திய நாட்டினர் யார் வேண்டுமானாலும் இதற்கு விண்ணபிக்கலாம். 

தேர்வு முறை: இந்த அப்ரென்டிஷிப் பணிக்காக தனியாக எந்த தேர்வும், நேர்கானலும் நடத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ ஆகியவற்றில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை மார்ச் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும். இஸ்ரோ யுவிகா இளம் விஞ்ஞானி : விண்ணப்பம் செய்வது எப்படி? 

கல்வித்தகுதி : தேர்வர்கள் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : வேட்பாளர்களின் குறைந்தபட்ச வயது 15 வயதாக இருக்க வேண்டும், அதிகபட்ச வயது 24 ஆகவும் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவு தேர்வர்களுக்கு, உயர் வயது வரம்பில் ஐந்து ஆண்டுகள் தளர்வு கொடுக்கபடுகின்றன. 

ஓபிசி-என்சிஎல் பிரிவு தேர்வர்களுக்கு மூன்று ஆண்டுகளும், PwBD தேர்வர்களுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளன. 

கட்டணம்: பொது வகை வேட்பாளர்கள் ரூ .100 கட்டணம் செலுத்த வேண்டும்; எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி மற்றும் பெண் வேட்பாளர்கள் எந்த கட்டணத்தையும் சமர்ப்பிக்க தேவையில்லை.

No comments:

Post a Comment

Please Comment