11, 12-ம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கு அரசு புதிய அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

11, 12-ம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கு அரசு புதிய அறிவிப்பு

11, 12-ம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கு அரசு புதிய அறிவிப்பு



மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் (தட்கல் உட்பட) தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''நடைபெறவுள்ள மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுத, சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட)

தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை 19.02.2020 பிற்பகல் முதல் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

தனித்தேர்வர்கள் https://www.dge.tn.gov.in/என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் 'HALL TICKET ' என்ற வாசகத்தினை 'Click' செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள 'HSE MARCH 2020 FIRST YEAR & SECOND YEAR PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD' என்ற வாசகத்தினை 

'Click'செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேல்நிலை முதலாமாண்டு (+1 அரியர்) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வெழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து, ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும். 

செய்முறைத் தேர்வுள்ள பாடங்களில் தேர்ச்சி பெறாதோருக்கான குறிப்பு ஏற்கெனவே எழுத்துத் தேர்வெழுதி, எழுத்துத் தேர்வு மற்றும் அக மதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து 35 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று, 

செய்முறைத் தேர்வில் பங்கேற்காத காரணத்தால் தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது செய்முறைத் தேர்வில் மட்டும் பங்கேற்க வேண்டும். அவ்வகைத் தேர்வர்கள் மீண்டும் எழுத்துத் தேர்வினை எழுத வேண்டாம். ஏற்கெனவே செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல், 

எழுத்துத் தேர்வு மற்றும் அக மதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து 35 மதிப்பெண்ணுக்கும் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகிய இரண்டையும் கட்டாயம் எழுதவேண்டும். 

செய்முறைத் தேர்வு செய்ய வேண்டிய தனித்தேர்வர்கள், கருத்தியல் தேர்வு (Theory) நடைபெறும் நாட்களுக்கு முன்னரே தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி 

செய்முறைத் தேர்வு ((Practical) நடைபெறும் தேதி குறித்த விவரத்தை அறிந்துகொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

மார்ச் 2020 பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Govt announces new class 11th and 12th grade candidates


The State Examinations Directorate said that the candidates who applied for the March 2020 upper-level first-year / second-year general examinations (including Tatkal) can download the admission cards online. In a press release issued by the government, “Individuals (including Tatkals) who have applied for the March 2020 Secondary First Year / Second Year General Examination and Service Centers will be able to take their exam tickets from noon on 19.02.2020 at https://www.dge.tn.gov It can be downloaded through .in /.

You can go to https://www.dge.tn.gov.in/ and click on the HALL TICKET 'HSE MARCH 2020 FIRST YEAR & SECOND YEAR PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD' page. You can register your application number and date of birth and download their ticket. Only one exam ticket will be offered for both the top bachelor (+1 aire) and two-year (+2) general examiners.

Note for those who do not pass the procedure, those who have already scored 35 or above in both written test, writing test and internal assessment will not be eligible to participate in the procedure. Such examiners do not write the written exam again. Candidates who have not already taken the exam, but have passed both the Written Examination and the Internal Assessment and have obtained less than 35 marks, must now write both the Written Examination and the Practical Examination.

Practical to do tanittervarkal, theoretical exam (Theory) held days before his reservation to the test center, the Main superintendent approached the practical ((Practical) held-to-date information on to ascertain. Relevant tervukkuta nulaivuccittinri no choice terveluta not allowed. March 2020 Go to the website can learn otut http://www.dge.tn.gov.in/ timetable for the examination, '' he said.

No comments:

Post a Comment

Please Comment