கல்வி கட்டணம் உயர வாய்ப்பு:
என்ஜினீயரிங் கல்லூரிகளில் 15 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர்
தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) 2020-21-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு செயல்முறை கையேட்டை சமீபத்தில் வெளியிட்டது.
அதில் பல்வேறு விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது.
அதில் என்ஜினீயரிங் கல்லூரியில் 15 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற வகையில் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை 20 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற நிலைதான் இருந்தது.
ஏற்கனவே என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், ஏ.ஐ.சி.டி.இ.யின் இந்த அறிவிப்புக்கு கல்லூரி நிர்வாகங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
காரணம், ஒவ்வொரு துறையிலும் 15 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்றால், கூடுதலாக பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
அப்படி நியமிக்கப்படும் பட்சத்தில் கல்லூரி நிர்வாகத்துக்கு கூடுதல் செலவினம் வரும். அந்த செலவினம் மாணவர்களின் தலையில்தான் விழும். இந்த அறிவிப்பை வைத்து பார்க்கும்போது, என்ஜினீயரிங் கல்வி கட்டணம் உயருவதற்கான வாய்ப்பே அதிகம் இருக்கிறது.
இதேபோல், 3 ஆண்டுகளுக்கு புதிய என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்படாது. என்ஜினீயரிங், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் என்ஜினீயரிங் படிப்புகள் மட்டுமல்லாது எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.ஜி.டி.எம். ஆகிய படிப்புகளை நடத்துவதற்கும் அனுமதி பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment