பிளஸ்2 தேர்வில் சாதிக்க வேண்டுமா?... 8ம் தேதி வெற்றி நமதே நிகழ்ச்சிக்கு வாருங்கள், வெற்றியோடு திரும்புங்கள்: மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி ஏற்பாடு
வேலூர்: தினகரன், விஐடி பல்கலைக்கழகம் இணைந்து வருகிற 8ம் தேதி நடத்தும் வெற்றி நமதே நிகழ்ச்சியில் பிளஸ் 2 மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் கலந்து கொள்ள வசதியாக இலவச பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் வாழ்க்கை எனும் பயணத்தில் அடுத்த அடியை எடுத்து வைக்க பிளஸ்2 பொதுத்தேர்வு என்ற முக்கிய சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பை கடந்து பயணம் செய்ய கடின முயற்சி தேவை. அதில் ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கை லட்சியத்தை தீர்மானிப்பது பிளஸ் 2 தேர்வில் பெறும் மதிப்பெண்களே.
அதனால் தான் பிளஸ்2 பொதுத்தேர்வில் எல்லா பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக முழுநேரமும் கடின முயற்சி எடுத்து மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனாலும் பிளஸ்2 பொதுத்தேர்வு என்றாலே அதிக மதிப்பெண் பெற முடியுமா? என்ற அச்சத்தில் மாணவர்கள் தவிக்கின்றனர்.
இந்த அச்சத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்கவும், தேர்வை தைரியமாக எதிர்கொள்ளவும், அதிக மதிப்பெண்களை பெறவும், வேலூர் தினகரன் நாளிதழ் மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து 6வது ஆண்டாக வெற்றி நமதே நிகழ்ச்சியை வருகிற 8ம் தேதி நடத்துகின்றன.
பிளஸ்2 பயிலும் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் இந்த 'வெற்றி நமதே' நிகழ்ச்சி வேலூர் விஐடி பல்கலைக்கழகம் அண்ணா ஏசி அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு துவங்கி மதியம் 1.30 மணி வரை நடக்கிறது.
இதில் மாணவ, மாணவிகளின் பல்வேறு சந்தேங்களுக்கு தலைசிறந்த கல்வியாளர்கள் பதில்களை வழங்குவார்கள். ஆகவே, பாடங்கள் வாரியாக தேர்வில் கேட்கப்படும் கேள்விகள்,
அவற்றுக்கு எவ்வாறு பதில் எழுத வேண்டும் என்று பொதுத்தேர்வு சம்பந்தப்பட்ட எல்லாவிதமான சந்தேங்களையும் மாணவ, மாணவிகள் கேட்டு தெளிவு பெறுவதுடன் தேர்வு பயத்தில் இருந்தும் விடுபடலாம்.
எனவே மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்களது லட்சியத்தை எட்டலாம். வெற்றி நமதே நிகழ்ச்சி நடைபெறும் விஐடி பல்கலைக்கழகத்துக்கு வேலூர் பழைய பஸ் நிலையம்,
புதிய பஸ் நிலையம் மற்றும் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களிலிருந்து இலவச பஸ் வசதி செய்யப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தினகரன் நாளிதழ் மற்றும் விஐடி பல்கலைக்கழகம் செய்து வருகின்றன. வேலூர் தினகரன்-விஐடி இணைந்து நடத்தும் வெற்றி நமதே நிகழ்ச்சிக்கு ரேடியோ பார்ட்னராக வேலூர் சூரியன் எப்எம் 93.9 உள்ளது.
Want to achieve the Plus 2 exam? ... Come to the Victory Namaste event on the 8th, return with the winner: Free Bus Facilities for Students
Vellore: VINAMARA, VIT University is organizing a 'Victory Namade' event on the 8th with the participation of two plus two students. Free bus services have been arranged for students to attend. Plus 2 General Elections is the key to taking the next step in the journey of students' lives.
It takes hard work to travel past this junction. Plus 2 marks are to determine the life objective of each student. This is why students are studying all the time and trying hard to get higher marks in all subjects in the Plus 2 general exam. But can the Plus 2 General Election be the highest score?
To release the students from this fear, to face the exam boldly and to get high marks, Vellore Dinakaran newspaper and VIT University will host the 6th consecutive year of success. The 'Victory Namade' event will be held at the Vellore VIT University Anna AC auditorium, guiding tens of thousands of students from Plus Two.
The show starts at 9.30am and runs until 1.30pm. Leading educators will provide answers to various questions of students and students. Therefore, the questions that are asked in the lesson-wise examination, how to answer them, all the questions related to the general election can be heard by the student and the student and get rid of the fear of choice.
So all students can attend the event with their parents and achieve their goal. The VIT University, which hosts the Vidya Namade event, will have free bus services from Vellore Old Bus Stand, New Bus Stand and Katpadi Chittoor Bus Stand. Arrangements are being made by Dinakaran Daily and VIT University. Vellore Surya FM 93.9 is the radio partner for the Vellum Dinakaran-VIT joint venture.

No comments:
Post a Comment
Please Comment