ஈடு வேலை நாள் குறித்த விபரத்தை குறைந்த பட்சம் 2 நாட்களுக்கு முன்னராவது தெரிவிக்க வேண்டும் -ஆசிரியர்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஈடு வேலை நாள் குறித்த விபரத்தை குறைந்த பட்சம் 2 நாட்களுக்கு முன்னராவது தெரிவிக்க வேண்டும் -ஆசிரியர்கள்

ஈடு வேலை நாள் குறித்த விபரத்தை குறைந்த பட்சம் 2 நாட்களுக்கு முன்னராவது தெரிவிக்க வேண்டும் -ஆசிரியர்கள் 



விடுமுறையை சரி செய்யும் நாளை கடைசி நேரத்தில் அறிவிப்பதால் பள்ளிகளில் மாணவர் வருகை சரிந்து வருவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை பட்டியல் தயாரித்து உரிய கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வந்தனர். இதனால், அந்ததந்த நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள விழாக்கள் உட்பட உள்ளூர் விடுமுறைக்கு ஏற்ப விடுமுறை அனுமதி பெறப்பட்டு பின்னர் ஒருநாள் ஈடு செய்யும் வகையில் வேலை நாள் அறிவிக்கப்பட்டு பள்ளி செயல்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த பணியானது மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவின் பேரில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் செய்யப்பட்டு வருவதாகவும், 

இதனால் உள்ளூர் திருவிழாக்கள், பண்டிகைகள் ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் சராசரியான வேலை நாள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளூர் பண்டிகை, திருவிழாக்களுக்கு விடுமுறை உள்ளதா என தெரியாமல் தத்தளிக்கும் நிலை இருந்து வருகிறது. இதுமட்டுமன்றி, பொதுவாக ஈடு செய்யப்படும் வேலை நாளாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுகுறித்த அறிவிப்பு குறைந்தபட்சம் 2நாட்களுக்கு முன்னர் வழங்கினால்தான் ஆசிரியர்கள் பள்ளி இறைவணக்கத்தின் போது வேலை நாள் குறித்த அறிவிப்பை வெளியிட உதவியாக இருக்கும் என கருதுகின்றனர். பள்ளி முடிய கூடிய கால அவகாசத்தில் இந்த அறிவிப்பை உரிய அதிகாரிகள் தெரிவிப்பதால் இந்த விபரம் மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக சென்று தெரிவிக்க வேண்டி உள்ளது. 

மேலும், பள்ளி முடியும் நேரம் என்பதால் மாணவர்கள் வீட்டிற்கு புறப்பட்டு செல்லும் மனநிலையில் இருப்பதால் ஆசிரியர் தெரிவிக்கும் இந்த விபரத்தை சரிவர கேட்டுகொள்வதில்லை. இதனால் மாணவர் வருகை பதிவானது ஈடு செய்யும் நாளில் 30 முதல் 40 சதவீதம் வரை சரிவதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்கூட்டியே இந்த விபரத்தை பெற இயலாததால் தங்களது விடுமுறையில் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து சரிவர திட்டமிட இயலாமல் மன உளைச்சலுக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட கல்விதுறை அதிகாரிகள் ஈடு வேலை நாள் குறித்த விபரத்தை குறைந்த பட்சம் 2 நாட்களுக்கு முன்னராவது தெரிவிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


At least 2 days in advance of the date of compensation


Educators have expressed concern that student attendance at schools is declining as the holiday is announced tomorrow. For the past 20 years, elementary and middle school principals have prepared a list of holidays with the approval of appropriate education authorities. Thus, the school will operate by announcing a working day in order to compensate for the day after the holiday permit is obtained in accordance with local holidays including the ceremonies in the respective municipal and panchayats. But for the past few years this work has been done at the District Education Office on the orders of the District Education Officer.

This makes the average working day list without taking into account local festivals and festivals. This has resulted in teachers and students getting stuck in the local festivals and holidays without knowing if there is a holiday. Despite this, Saturday is generally declared as a working day. However, teachers are expected to be notified of the work day during the school prayer, if the announcement is made at least 2 days in advance. This notification should be made available to the students on a class-by-case basis as the relevant authorities notify the school as soon as possible.

Also, since the time for school is over, the students are in the mood to leave home. Academics have suggested that the student attendance record will fall by 30 to 40 per cent on the compensation day. Furthermore, teachers and students are so frustrated that they are unable to plan ahead of time that they are unable to get this information in advance. Therefore, it is expected that the relevant academic authorities should report the compensation work at least 2 days in advance.

No comments:

Post a Comment

Please Comment