பிளஸ் 2 தேர்வு எழுதுவோருக்கு 'தேர்வுக்கு தயார்' சிறப்பு நிகழ்ச்சி
தர்மபுரி: தர்மபுரி எம்.எப்., வானொலியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருக்காக, 'தேர்வுக்கு தயார்' என்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இது குறித்து, தர்மபுரி பண்பலை வானொலி நிலையத்தின், நிகழ்ச்சி தலைவர் முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி பண்பலையில் (எப்.எம்.,), தேர்வுக்கு தயார் என்ற சிறப்பு நிகழ்ச்சி, 24 முதல், மார்ச், 2 வரை, காலை, 7:30 மற்றும் மாலை, 6:50 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.
அதன்படி, இன்று, அரசு பள்ளி ஆசிரியை வானிலா, ஆங்கிலம் பாடம் குறித்தும், 25ல் ஆசிரியர் காமராஜ் - கணித பாடம், 26ல் ஆசிரியர் பாக்கியராஜ் - இயற்பியல், 27ல் ஆசிரியை சிவரஞ்சனி - வேதியியல் பாடம் குறித்து பேசுகின்றனர்.
இதேபோல், 28ல் ஆசிரியர் முகமதுஅலி - உயிரியல், 29ல் ஆசிரியர் மாலிக்ஜான் - வரலாறு, மார்ச், 1ல் ஆசிரியர் மாதேஷ் - பொருளியல், 2ல் ஆசிரியர் மாதையன்- கணக்கு பதிவியல் பாடம் குறித்தும், எளிய வகையில் அதிக மதிப்பெண் பெறும் விபரங்கள் குறித்து விளக்கி பேச உள்ளனர்.
எனவே, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் எப்.எம்., நிகழ்ச்சிகளை கேட்டு பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Plus 2 Exam Writers 'Ready For Exam' special event
Dharmapuri: Dharmapuri MF Radio is to broadcast a special awareness program 'Ready for Examination' for students and students who are planning to take the Plus 2 general election. Published by Dharmapuri Modera Radio Station, Program Chairman Muralitharan: The Dharmapuri Museums (FM), special event, Ready for Examination, 24th, March-2th, Morning, 7:30 pm and 6:50 pm olipparappakiratu.
Accordingly, today, the government school teacher is talking about astronomy, English lesson, teacher kamaraj - math lesson in 25, teacher bhakiraj in physics, 27 in teacher sivaranjani - chemistry lesson. Similarly, editor Mohammed Ali - Biology in 28, Malikjian in History in 29, Mateesh in Economics in March 1, Matheyan in Economics in March 2, Mathian in Accounting in 2, and Accounting Lesson lesson in the simple, high scoring details. Therefore, the student who is writing Plus 2 exam can benefit from listening to FM programs. He has stated thus.

No comments:
Post a Comment
Please Comment