‘சிடெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 2 வரை அவகாசம் நீட்டிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

‘சிடெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 2 வரை அவகாசம் நீட்டிப்பு

‘சிடெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 2 வரை அவகாசம் நீட்டிப்பு



மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (‘சிடெட்’) விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் பணியில் சேர்வதற்கு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (‘சிடெட்’) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். 


இரு தாள்கள் கொண்ட இந்தத் தேர்வை சிபிஎஸ்இ ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. பட்டதாரிகளின் கோரிக்கையை ஏற்று.. இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல்தாள் தேர்வும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப் படுகிறது. ‘சிடெட்’ தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான ‘சிடெட்’ தேர்வு ஜூலை 5-ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த ஜனவரி 24-ம் தேதி தொடங்கிய ‘சிடெட்’ தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளையுடன் (பிப்.24) முடிந்துவிடும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. 


இந்நிலையில், பட்டதாரிகளின் கோரிக்கையை ஏற்று தற்போது மார்ச் 2-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் https://ctet.nic.in/ என்ற இணையதளம் வழியாக மார்ச் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை மார்ச் 5-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். நாடு முழுவதும் 112 நகரங்களில், 20 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Please Comment