`பூமியே சிறிய புள்ளியாகத் தெரியும் புகைப்படம்!' - 30 ஆண்டுகளுக்குப் பின் புதிப்பித்து வெளியிட்ட நாசா - ThulirKalvi Blogs

Latest

Search This Site

`பூமியே சிறிய புள்ளியாகத் தெரியும் புகைப்படம்!' - 30 ஆண்டுகளுக்குப் பின் புதிப்பித்து வெளியிட்ட நாசா

`பூமியே சிறிய புள்ளியாகத் தெரியும் புகைப்படம்!' - 30 ஆண்டுகளுக்குப் பின் புதிப்பித்து வெளியிட்ட நாசா



30 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1990-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி பூமியிலிருந்து 4 பில்லியன் மைல் தொலைவிலிருந்து 'பேல் ப்ளூ டாட்' (Pale Blue Dot) என்ற புகைப்படம் எடுக்கப்பட்டது. இது Voyager 1 என்னும் தொலைநோக்கு விண்கலத்தால் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். 

இந்தப் புகைப்படத்தில் பூமி சூரிய வெளிச்சத்தில் ஒரு பிக்ஸலை விட சிறிய அளவில் ஒரு புள்ளியாகத் தெரியும். இதைப் படமெடுத்த Voyager 1 விண்கலத்துடன் Voyager 2 விண்கலமும் செலுத்தப்பட்டது. இதில் Voyager 1 வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டு கோள்களுக்கு மேல் பறந்தது. 

Voyager 2 சூரியக் குடும்பத்தின் அனைத்து பெரிய கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றின் மேல் பறந்தது. இந்தப் புகழ்பெற்ற 'பேல் ப்ளூ டாட்' படத்தின் மூலம் பூமியை இதற்குமுன் பார்த்திராத ஒரு கோணத்தில் நம்மால் பார்க்க முடிந்தது.

இதன் 30 வது வருடத்தை அடுத்து நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்றைய நவீனத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் இதைச் செய்து புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. உண்மையான புகைப்படம் பல புகைப்படங்களின் தொகுப்பாகும். 

இதில் மூன்று நிற ஃபில்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புதிய புகைப்படத்திலும் நிற ஃபில்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், புகைப்படம் தெளிவாக இருக்க அவை சரியான அளவில் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. 

இதோடு சூரியனின் கதிர்வீச்சு நிறமும் வெள்ளையாகத் தோன்றும் வண்ணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இந்தப் புகைப்படத்தின் வாயிலாக எதுவும் பெரிதாகத் தெரியாது என்றாலும் அண்டத்தில் பூமி ஒரு மிகச்சிறிய அங்கம் என்பதை உலகுக்குத் தெரிவிக்கவே 

இந்தப் புகைப்படங்களை எடுத்தது Voyager குழு. Voyager 1 விண்கலம் இதுவரை சூரியக் குடும்பத்தின் மற்ற கோள்களைச் சேர்த்து மொத்தம் 59 புகைப்படங்கள் எடுத்துள்ளது. இதைப் பயன்படுத்தி `Family Portrait' ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

இதில் நெப்ட்யூன், யுரேனஸ், சனி, வியாழன், வெள்ளி ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் செவ்வாய்க்கிரகம் சூரிய ஒளியால் மறைந்துவிட்டது. திங்கள் சூரியனுக்கு மிக அருகில் இருந்ததால் தெரியவில்லை. மிகச்சிறிய கோளான ப்ளூட்டோ வெகு தொலைவில் சிறிய கரும்புள்ளியாகத் தோற்றமளித்தது. 

2012 ஆகஸ்ட் மாதம் Voyager 1 இன்டெர்ஸ்டெல்லர் ஸ்பேஸை (Interstellar Space) அடைந்தது. இந்த Voyager 1 தான் தற்போது விண்வெளியில் வெகு தொலைவில் இருக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருளாகும்!


Photograph of Earth as Small Spot! ' - NASA released 30 years later


The Pale Blue Dot was photographed more than 30 years ago on February 14, 1990, about 4 billion miles from Earth. This is a photo taken by the Voyager 1 telescope spacecraft. In this photo the earth is visible to a point smaller than a pixel in sunlight. The Voyager 1 spacecraft, which was filmed, was also launched by the Voyager 2 spacecraft. In which Voyager 1 flew over two planets Jupiter and Saturn. Voyager 2 flew over all of the Solar System's largest planets, Jupiter, Saturn, Uranus, and Neptune.

With this famous 'Pale Blue Dot', we can see the Earth at an angle not seen before. Real photography is a collection of many photographs. Three color filters have been used. Color filters are also used in the new photo. But they are only used in the right quantity to make the photo clear. In addition, the sun's radiation color has been changed to make it appear white.Although nothing much is known about this photo, the Voyager team took these photos to inform the world that the Earth is a very small member of the universe. 

The Voyager 1 spacecraft has so far taken a total of 59 photos of the Solar System's other planets. Using this, a family portrait is created. It was filmed with Neptune, Uranus, Saturn, Jupiter and Venus. In this case, Mars has disappeared from the sunlight. It is not known why Monday was so close to the sun. The smallest planet, Pluto, appeared to be a tiny black spot. In August 2012, Voyager 1 reached Interstellar Space. This Voyager 1 is the only man-made object currently in space!

No comments:

Post a Comment

Please Comment