மார்ச் 31-க்குப் பிறகு
ஆதாருடன் இணைக்காத பான் கார்டு செல்லாது
நிரந்தர கணக்கு எண் என்ற பான் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தெரி வித்துள்ள நிலையில், மார்ச் 31-ம் தேதிக்குள் இணைக்காவிட்டால் அது செல்லாது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
பான் மற்றும் ஆதார் இணைப் புக்கான கால அவகாசம் மார்ச் 31 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 27-ம் தேதி வரை 30.75 கோடி பான் அட்டைதாரர்கள் ஆதாருடன் தங்கள் கணக்கை இணைத்துள்ளனர். இன்னமும் 17.58 கோடி பான் அட்டைதாரர்கள் இணைக்கப்பட வேண்டும்.
மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு ஆதாருடன் இணைக்கப்படாத பான் அட்டைகள் செயலற்றதாகி விடும். பிறகு ஆதார் எண்ணை தெரிவித்து அத்துடன் இணைத்த பிறகு செயல்பாட்டுக்கு வரும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஆதார் அட்டை அரசியல் சாசனத்துக்குட்பட்டு அங்கீகாரம் கொண்டதாக அறிவிக்கப்பட்டது. வருமான வரி செலுத்துவதற்கு விரல் ரேகை பதிவு கொண்ட ஆதார் அட்டை அவசியம் என்றும் அதன் அடிப்படையில் பான் அட்டைகள் வழங்கப்பட வேண் டும் எனவும் குறிப்பிட்டது.

No comments:
Post a Comment
Please Comment