62 காலி பணியிடங்களுக்கு 12 ஆயிரத்து 652 பேர் விண்ணப்பம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

62 காலி பணியிடங்களுக்கு 12 ஆயிரத்து 652 பேர் விண்ணப்பம்

62 காலி பணியிடங்களுக்கு 12 ஆயிரத்து 652 பேர் விண்ணப்பம்



சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில், 62 காலிப் பணியிடங்களுக்கு, 12 ஆயிரத்து, 652 பேர் விண்ணப்பித்துள்ளனர்.சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின், ஆள் சேர்ப்பு நிலையம் சார்பில், காலிப் பணியிடங்களை நேரடியாக நிரப்ப,ஜன., 10ல், அறிவிப்பு வெளியிடப்பட்டது. கல்வித் தகுதியாக, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மத்திய கூட்டுறவு வங்கியில், அலுவலக உதவியாளர்கள், 53, ஓட்டுனர் - 4, இதர கூட்டுறவு கடன் சங்கங்களில், அலுவலக உதவியாளர் - 5 என மொத்தம், 62 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதற்கான விண்ணப்பம், பிப்., 7 வரை பெறப்பட்டது. அலுவலக உதவியாளர் பணிக்கு, 12 ஆயிரத்து, 201; ஓட்டுனர் பணிக்கு, 451 என மொத்தம், 12 ஆயிரத்து, 652 பேர் விண்ணப்பித்துள்ளனர்.ஒரு பணிக்கு, சராசரியாக, 204 பேர்விண்ணப்பித்துள்ளனர். இதனால், கடும் போட்டி நிலவுகிறது. இதில், 90 சதவீதம் பேர், பி.ஏ.,- பி.இ.,- எம்.இ., உள்ளிட்ட பட்டதாரிகள் ஆவர். நேர்காணல் நடத்தி, இடஒதுக்கீடு அடிப்படையில், பணி ஆணை வழங்கப்படுகிறது. இதற்காக, தகுதி அடிப்படையில், அழைப்பு கடிதம் அனுப்புவதற்கான பணிகள், முடுக்கி விடப்பட்டுள்ளன.


12 thousand 652 applicants for 62 vacancies


In the Salem District Co-operative Societies, 12 thousand and 652 persons have applied for 62 vacancies. In Central Co-operative Bank, Office Assistants, 53, Drivers - 4, Other Co-operative Credit Societies and Office Assistants - 5 out of 62 are selected.

Application for this, received up to Feb. 7th. For office assistant work, 12 thousand, 201; A total of 121, 652 people applied for driving jobs, 451. On average, 204 people applied for a job. Thus, there is fierce competition. Of these, 90 per cent are graduates, including B.A., - B.E., - M.E. Conduct interviews and assign them on a reservation basis. For this purpose, the process of sending a letter of invitation has been accelerated.

No comments:

Post a Comment

Please Comment