பிப்ரவரி 9, 10-ம் தேதிகளில்
முதுநிலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,150 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
இந்தத் தேர்வை 1.46 லட்சம் பேர் எழுதினர். இதில் தரவரிசை யின்படி முன்னிலையில் இருந்த 3,833 பேருக்கு நவம்பரில் சான்றி தழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து தேர்ச்சி பட்டியலும் வெளியானது.
இந்நிலையில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு மாவட்டவாரியாக பிப்ரவரி 9, 10 தேதிகளில் நடைபெறும் என்று கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முது நிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத் திடம் இருந்து தேர்ச்சி பட்டியல் பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கு வதற்கான கலந்தாய்வு பிப்ர வரி 9, 10-ம் தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும். எனவே, தேர்ச்சி பெற்ற பட்ட தாரிகள் அனைவரும் உரிய அத்தாட்சி சான்றுடன் கலந்தாய் வில் பங்கேற்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment