துப்புரவு தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

துப்புரவு தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

துப்புரவு தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு 



தி.மலை மாவட்டத்தில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகையை பெற விண்ணப்பிக் கலாம் என ஆட்சியர் கந்தசாமி தெரி வித்துள்ளார். 

 இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்டத்தில் சுகாதார மற்ற தொழில்புரிபவர்கள், துப்புரவுப் பணி செய்பவர்கள், குப்பை அகற்றுபவர்கள், தோல் பதனிடும் தொழில் செய்பவர்கள் மற்றும் கழிவுப் பொருட்களை சேகரிப்பவர்களின் பிள்ளை களுக்கு மத்திய அரசின் உதவித் தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 

 வீடுகளில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களின் பராமரிப்புப் படியாக வீட்டில் உள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் (ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை) மாதம் ரூ.225 மற்றும் சிறப்பு மானியமாக ஆண்டுக்கு ரூ.750 வழங்கப்படுகிறது. விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு பராமரிப்புப் படியாக 3-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாதம் ரூ.700 மற்றும் சிறப்பு மானியமாக ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது. 

 தூய்மைப் பணி மற்றும் சுகாதார மற்ற பணிகளில் பணிபுரிபவர்களின் குழந்தைகள் பள்ளியில் படிக்க வேண்டும். ஜாதி மற்றும் மதம் தடையில்லை. வருமான உச்ச வரம்பு கிடையாது. தகுதி உள்ளவர் கள், சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் தி.மலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் கல்வி உதவித் தொகைக்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

 பணியில் இருப்பதற்கான சான்றி தழை கிராம நிர்வாக அலுவலர் அல்லது தலைமை ஆசிரியரி டம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் உள்ள மாவட்ட ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் நல அலு வலரை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment