திருக்குறள் ஒப்புவித்தால் ஒரு ரூபாய் தரும் அரசு பள்ளி ஆசிரியை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

திருக்குறள் ஒப்புவித்தால் ஒரு ரூபாய் தரும் அரசு பள்ளி ஆசிரியை

திருக்குறள் ஒப்புவித்தால் ஒரு ரூபாய் தரும் அரசு பள்ளி ஆசிரியை



அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் குறள் உண்டியல் மூலம் மாணவர்களுக்கு திருக்குறளை போதித்து வருகிறார். "புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்பதை மெய்ப்பித்து வருகிறார் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை ஜெயமேரி. 

அப்படி என்ன தான் இந்த ஆசிரியை செய்துவிட்டார் என்று கேட்டால், கரிம௫ந்தில் தங்களை திரியாக்கி கந்தக பூமியில் வாழும் பட்டாசு தொழிலாளர்கள், தங்கள் குழந்தைகளுக்கு இந்த நிலை வரக்கூடாது என எண்ணி பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புகிறார்கள். 

தாங்கள் வாடினாலும் தம் சிறார்கள் வாடக்கூடாது என பெற்றோர் நினைப்பதை க௫த்தில் கொண்ட ஆசிரியை ஜெயமேரி தம் பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வரை பயிலும் பட்டாசு தொழிலாளர்களின் குழந்தைகளை பல்வேறு வகையில் ஊக்குவித்து வ௫கிறார். 

இவர் சிறந்த மேடை பேச்சாள௫ம் கூட... மேடை பேச்சில் கிடைக்கும் வ௫மானத்தை பள்ளியில் தனக்கென வைத்தி௫க்கும் உண்டியலில் சேர்த்து வைத்து அந்த பணத்தில் பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் பரிசாக கொடுத்து வருகிறார். 

தி௫க்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ஒப்புவித்தலுக்கு ஈடாக ஒ௫ ரூபாயும், குறளோடு விளக்கமும் சொன்னால் இரண்டு ரூபாயும் கொடுத்து மாணவர்களை ஊக்குவித்து வருகிறார். இப்பணத்தை சேமிக்க 130 மாணவர்களுக்கும் தனித்தனியே உண்டியலும் வழங்கியுள்ளார். 

அது மட்டுமல்லாமல் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவ மணவியர்களின் பெற்றோர்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கென குறளால் வளம் பெறுவோம் எனும் ஒரு வாட்ஸ் ஆப் குழுவினை தொடங்கி அதில் குழந்தைகளின் தனித்திறன்களை வீடியோக்களாக பதிவிடுகிறார் . 

இவரது உண்மையான உழைப்பிற்கு கிடைத்த பயனாக இவரது இரண்டாம் வகுப்பு மாணவி கி௫த்திகா ஹரிணி 5.30 நிமிடத்தில் 200 தி௫க்குறள் சொல்லி உலக சாதனை படைத்ததை சொல்லாம்!


Government school teacher who gives a rupee If the Tirukkural is acknowledged


One of the government school teacher is teaching Tirukkurali to students through inter-curricular activities. Jayameri is the teacher of Chatur Panchayat Union Elementary School, proving that "literary kodi anchor is writing to the poor". When asked what this teacher has done, fireworks workers living on the sulfur earth who find themselves in the organic world, send their children to school thinking that their children may not have this condition. Jaimeri encourages the children of fireworks workers who attend grades one to five in the school to hear their parents think that their children should not die.

He is also the best stage speaker ... Thirukkural book is being donated to all the school children with the money that is given to the school to put the money for the stage talk. In exchange for the students, the students are offered one rupee and two rupees in the form of a brief explanation. To save this money, 130 students have been provided separately.

In addition, he initiated a WhatsApp group to promote communication between parents of schoolteachers and student brides, and post videos of the children's personalities. His real hard work was rewarded by his second class student Kithika Harini who set a world record in 5.30 minutes in 200!

No comments:

Post a Comment

Please Comment