யார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..? ஆய்வில் வெளியான தகவல்..!
நீண்ட காலம் ஆரோக்கியமாக, இளமையோடு, எந்த நோயும் இல்லாமல் வாழ ஒரு அற்புதமான மருந்து உள்ளது. 8 மணி நேரம் நிம்மதியான தூக்கம்தான் அந்த மருந்து. தூக்கமா என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம்.
தூக்கம் தொடர்பான பல ஆய்வு முடிவுகளில் தூக்கக்தை விட சிறந்த மருந்து ஏதும் இல்லை என தெரியவந்திருக்கிறது. சரியாக தூங்கவில்லை என்றால், அறிவாற்றல் பாதிக்கப்படுகிறது. முடிவெடுக்கும் ஆற்றல், திட்டமிடும் ஆற்றல், நினைவாற்றல், கவனம் ஆகியவை தூக்கம் இல்லாததால் பாதிக்கப்படுகிறது.
போதுமான தூக்கமில்லாததால் உடலுக்குத் தேவையான சுரப்பிகளும் ஒழுங்காகச் சுரப்பதில்லை. ஒரு நாளில் 5 மணிநேரத்துக்கும் குறைவாகத் தூங்குவோருக்கு இதய நோய் வரும் அபாயம் மூன்று மடங்கு வரை அதிகரிக்கிறது.
இரவில் தூங்காமல் அதை ஈடுகட்ட பகலில் தூங்குவது இன்று சகஜமாக காணும் சூழலே.
எத்தனை மணி நேரம் பகலில் தூங்கினாலும் அது இரவு தூக்கத்திற்கு ஈடாகாது. இரவில் கண்விழிப்பவர்களுக்கு "Circadian Rythm" சார்ந்த கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
ஒரு நாளைக்கு 7 மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்கினால், ஆயுள் குறையும்.
ஒரு வாரத்துக்கு சரியாகத் தூங்கவில்லை என்றால், 1 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கும். சிலர் இரவு, பகல் என பாராமல் எப்போதும் தூங்கிகொண்டே இருந்து தூங்குமூஞ்சி என்று பெயர் வாங்குவார்கள்.
ஆய்வுகளின்படி ஒருவர் இரவில் சரியாக 8 மணி நேரம் தூங்கினால், பகலில் தூக்கம் வராது, அதையும் மீறி தூக்கம் வந்தால் அதுவும் குறைபாடு என கூறுகிறது. மேலும் வாஷிங்டனில் இருந்து இயங்கும் தேசிய தூக்க நிறுவனம் சமீபத்தில் நடத்திய
ஒரு ஆய்வில் யார் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும் என என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி
பிறந்த குழந்தைகள் ( மூன்று மாதங்கள் வரை )
நாளொன்றுக்கு 14-ல் இருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும். அதேபோல் 19 மணி நேரத்திற்கு மேல் தூங்கவிடக்கூடாது
4 முதல் 11 மாதம் வரை
நாளொன்றுக்கு 12-ல் இருந்து 15 மணி நேரம் வரை தூங்கவேண்டும், குறைந்தது 10 மணி நேரம்வரை தூங்கினாலும் போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது
1 முதல் 2 வயது வரை
தினமும் 11-ல் இருந்து 14 மணி நேரம் வரை தூங்க வேண்டும் .
மேலும்16 மணி நேரத்திற்கு மேல் தூங்குவது தவறு
3 முதல் 5 வயது வரை
தினமும் 10 முதல் 13 மணி நேரம் வரை தூங்கவேண்டும், 8 மணி நேரத்திற்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரத்திற்கு மேலாகவோ தூங்குவது தவறு
6 முதல் 13 வயது வரை
9 முதல் 11 மணிநேரம் வரை தூங்கவேண்டும்.
தினமும் 7 மணி நேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணி நேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமற்றது
14 முதல் 17 வயது வரை
8 முதல் 10 மணி நேரம் வரை தூங்கவேண்டும்.
11 மணி நேரத்திற்கு மேலாக அல்லது 7 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவது தவறு
18 முதல் 25 வயது வரை
7ல் இருந்து 9 மணி நேரம் வரை தூங்கவேண்டும், அதேபோல் 6 மணி நேரத்துக்குக் குறைவாகவோ அல்லது 11 மணி நேரத்துக்கு மேலாகவோ தூங்கக்கூடாது.
26 முதல் 64 வயது வரை
மேற்கண்ட 18 முதல் 25 வயது வரை உடையவர்கள் தூங்கவேண்டிய நேரமே 26 முதல் 64 வயது வரை உள்ளவர்களுக்கும் பொருந்தும்.
65 வயது முதல் அதற்கு மேல்
ஆரோக்கியமான தூக்கம் என்பது தினசரி 7ல் இருந்து 8 மணிநேரம் வரை.
ஆனால் 5 மணி நேரத்துக்குக் குறைவாகவோ அல்லது 9 மணிநேரத்துக்கு மேலாகவோ தூங்கக்கூடாது.
இதில் நீங்கள் எந்த வயதுடையவர்கள் என்று தெரிந்து அதற்கேற்ற வகையில் உங்கள் தூக்கத்திற்கான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்கவேண்டுமா, இரவில் நன்றாக தூங்குங்கள்..
Who should sleep for so many hours ..? Information released in the study ..!
It is a wonderful medicine to live long, healthy, young and without any illness. The medicine is 8 hours of sleep. Do not think of sleep as normal. Many sleep-related studies have shown that there is no better drug than sleep. If not sleeping properly, cognition suffers. Lack of sleep affects decision-making, planning power, memory, and focus. Lack of adequate sleep causes the body's glands to not function properly. For those who sleep less than 5 hours a day, the risk of heart disease increases threefold.
Sleeping in the daytime to compensate for it at night is a common situation today. No matter how many hours of daylight you sleep, it is not a good night's sleep. Night-blinds are more likely to develop "Circadian Rythm" -based disorders. If you sleep less than 7 hours a day, life will decrease. If you do not sleep properly for a week, you can gain up to 1 kg body weight. Some people take the name of sleeping and sleeping without ever seeing it as night and day. According to studies, if one sleeps properly for 8 hours at night, it is not enough to sleep during the day, and if you fall asleep, it is also deficient.
And a recent survey by the National Sleeping Institute, based out of Washington, has published a list of who's sleeping the most. Children born accordingly (up to three months old) should sleep between 14 and 17 hours per day. Similarly, you should not sleep more than 19 hours, sleep for 12 to 15 hours per day for 4 to 11 months, and even sleep for at least 10 hours. But you should not sleep for more than 18 hours from 1 to 2 years of age and sleep 11 to 14 hours daily.
It is also wrong to sleep for more than 16 hours. Between 3 and 5 years old, you should sleep 10 to 13 hours daily, sleep less than 8 hours or more than 14 hours. Sleeping less than 7 hours or more than 12 hours daily is unhealthy. It is wrong to sleep more than 11 hours or less than 7 hours. From 18 to 25 years of age, you should sleep between 7 and 9 hours, as well as not less than 6 hours or more than 11 hours.
The age of 26 to 64 years for those aged 18 to 25 is the same as for those aged 26 to 64 years. Healthy sleep from age 65 to over 7 to 8 hours daily. But you should not sleep less than 5 hours or more than 9 hours. Find out what age you are in and take the time to sleep. Be refreshed all day, sleep well at night.

No comments:
Post a Comment
Please Comment