பொதுத் தேர்வு பணிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நியமனம்: தமிழக தேர்வுத் துறை விளக்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பொதுத் தேர்வு பணிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நியமனம்: தமிழக தேர்வுத் துறை விளக்கம்

பொதுத் தேர்வு பணிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நியமனம்: தமிழக தேர்வுத் துறை விளக்கம்



''பொதுத் தேர்வு பணிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள்'' என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகப் பள்ளிக் கல்வியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 2-ல்தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன்படி அறை கண்காணிப்பாளர், பறக்கும் படை அதிகாரிகள் உட்பட பொதுத்தேர்வு பணிகளுக்கு அனைத்துவித பள்ளிகளில் இருந்தும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணிகள் வழங்கக் கூடாது என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. 

இதுதொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது: பிளஸ் 1 , பிளஸ் 2 பொதுத் தேர்வைசராசரியாக 17 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். ஆனால், அரசு, அரசுஉதவி பள்ளிகளில் ஒரு லட்சம்முதுநிலை ஆசிரியர்களே பணிபுரிகின்றனர். 

இவர்களை கொண்டுபொதுத் தேர்வை குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்க முடியாது.அதனால், அரசு, அரசு உதவி பெறும்பள்ளி ஆசிரியர்களை போலதகுதியான தனியார் பள்ளி ஆசிரியர்களும் பொதுத்தேர்வு வேலைகளில் பயன்படுத்தப்படுவார்கள். அதேநேரம் அறை கண்காணிப்பாளர், விடைத்தாள் திருத்துதல் உட்பட குறிப்பிட்ட பணிகளே அவர்களுக்கு வழங்கப்படும். 

முதன்மை கண்காணிப்பாளர், மையங்களை மேற்பார்வையிடுதல், விடைத்தாள் மற்றும் வினாத்தாளை எடுத்துச் செல்லுதல் போன்ற முக்கிய பணிகளுக்கு அரசு, அரசு உதவி பெறும்பள்ளி ஆசிரியர்கள்தான் நியமிக்கப்படுவார்கள். 

அனைத்து பணிநியமனங்களும் மிகவும் வெளிப்படையாக உரிய விதிகளின்படியே நடைபெறும். இது வழக்கமான நடைமுறைதான். கடந்த வாரம் பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. 

அதில் முதன்மை கண்காணிப்பாளர் பணிக்குதான் தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் அல்லது ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்று அறிவுறுத்தினோம். அதை சிலர் தவறாக புரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கலாம். இவ்வாறு தேர்வுத் துறை அதிகாரிகள் கூறினர்.


Appointment of Private School Teachers in Public Selection Processes: Description of Tamil Nadu Selection Department


"Private school teachers will also be involved in the public choice process," said select officials. The general election for students of grades 10, 11 and 12 in Tamilnadu school education will be held from March 2 to April 13. The final work is now being accelerated. Accordingly, teachers from all schools are being selected for general election work, including room superintendent and flying squad officers. In this backdrop, there have been reports on social media that the exam department has ordered that private school teachers should not be given exams.

Selection department officials said yesterday: 17 lakh students are writing a plus-1 and plus-2 general exam. But there are one lakh senior teachers in government and government aided schools. The public choice cannot be taken in a timely manner. Therefore, private school teachers, similar to government and government aided school teachers, will be used for general election work. At the same time they are given specific tasks, including room supervisor, answer sheet editing.

The Chief Superintendent will be assigned Government and Government Aided School Teachers for key functions such as overseeing the centers, carrying out the answer sheet and questionnaire. All employment will be held in accordance with the most explicit terms. This is the usual practice. The guidelines for the general election were published last week. We instructed that the principal or superintendents of private schools should not be appointed to the task of the superintendent. Some may have misunderstood it and posted it on social networks. According to officials of the Select Department.

No comments:

Post a Comment

Please Comment