வரி ஏய்ப்புக்கு 'கல்தா!' நடைமுறைக்கு வருகிறது 'இ இன்வாய்ஸ்': போலி பில்களுக்கு இனி வாய்ப்பு இல்லை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வரி ஏய்ப்புக்கு 'கல்தா!' நடைமுறைக்கு வருகிறது 'இ இன்வாய்ஸ்': போலி பில்களுக்கு இனி வாய்ப்பு இல்லை

வரி ஏய்ப்புக்கு 'கல்தா!' நடைமுறைக்கு வருகிறது 'இ இன்வாய்ஸ்': போலி பில்களுக்கு இனி வாய்ப்பு இல்லை



திருப்பூர்:வரி ஏய்ப்பு, போலி பில்களை ஒழிக்கவே, ஜி.எஸ்.டி.,ல், இ- இன்வாய்ஸ் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது' என, தொழில்துறையினருக்கான கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) திருப்பூர் மாவட்ட கவுன்சில் சார்பில், 

மத்திய பட்ஜெட் மற்றும் 'இ- இன்வாய்ஸ்' குறித்த கருத்தரங்கம், அவிநாசி ரோட்டில் உள்ள ஆர்.கே., ரெசிடென்ஸியில் நேற்று நடந்தது. சி.ஐ.ஐ., மாவட்ட கவுன்சில் தலைவர் பாலன் தலைமை வகித்தார்.நேரடி வரிகள் குறித்து பி.எஸ்.ஆர்., 

அண்ட் கோ இயக்குனர் ஸ்ரீதர் பேசியதாவது:ஆடிட்டர், ஆலோசகர்களின் துணையின்றி, தனிநபர் எளிதாக வருமான வரி தாக்கல் செய்யமுடியும் என, நிதி அமைச்சர் தெரிவித்தார். 

பல்வேறு செலவினங்களை கழிப்பதற்கு வாய்ப்பு அளிக்கும் பழைய வரி விதிப்பு; எவ்வித வரிக் கழிவும் செய்யமுடியாத புதிய வரி விதிப்பு இதில் எதை பின்பற்றுவது என்கிற கேள்வி, குழப்பம் வரி செலுத்துவோருக்கு எழுகிறது; இதை தீர்ப்பதற்கு, ஆலோசகர்களின் உதவி தேவைப்படுகிறது.

இவ்வாறு ஸ்ரீதர் பேசினார்.'இ- இன்வாய்ஸ்' குறித்து கே.பி.எம்.ஜி., இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் பேசியதாவது:பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் முதலில் குறிப்பிட்டது, ஜி.எஸ்.டி., ரிட்டர்ன் தாக்கல் எளிமைப்படுத்தப்படுகிறது என்பதுதான்; வரும் ஏப்ரல் மாதம் முதல் இது நடைமுறைக்குவருகிறது. 

ஜி.எஸ்.டி., ரீபண்ட் நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளன.வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், ஆண்டு வர்த்தகம் 100 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள நிறுவனங்கள், 'இ-- இன்வாய்ஸ்' நடைமுறையை கடைபிடிப்பது கட்டாயமாகிறது. 

இதன்மூலம், வர்த்தகம் சார்ந்த அனைத்து விவரங்களும் வரித்துறை வசம் சென்றடையும்.'இ- இன்வாய்ஸ்' நடைமுறைக்கு வருவதற்கு முக்கியமான காரணம், போலி பில், வரி ஏய்ப்புதான். இதனால், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

'இ- இன்வாய்ஸ்' மூலம், முறைகேடுகள் தடுக்கப்படும்.அரசு தளத்தில் வர்த்தக விவரங்களை பதிவு செய்து பெறுவதுதான் 'இ- இன்வாய்ஸ்' என பலரும் நினைக்கின்றனர்; அவ்வாறில்லை. வழக்கம்போல ரசீதுகளை உருவாக்கி, அவ்விவரங்களை, போர்ட்டல் தளத்தில் அளிக்கவேண்டும்.

அதனடிப்படையில், டிஜிட்டல் கையொப்பம், கியூ.ஆர்.கோடு, ஐ.ஆர்.என்., நம்பருடன் கூடிய இன்வாய்ஸ் வழங்கப்படும். ஒரு இன்வாய்சில் இம்மூன்றும் இடம்பெற்றிருக்க வேண்டும்; இல்லையெனில் அந்த இன்வாய்ஸ் செல்லாததாகிவிடும்.

இவ்வாறு, அவர் பேசினார்.திருப்பூர் பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள், ஆடிட்டர்கள் பங்கேற்று, தங்கள் சந்தேகங்களை கேட்டு, தெளிவு பெற்றனர்.சி.ஐ.ஐ., மாவட்ட கவுன்சில் துணை தலைவர் திருக்குமரன் நன்றி கூறினார்.


'Kalta' for tax evasion 'Invoice': Fake bills no longer possible


Tirupur: The e-invoicing system has been introduced in the GST to eliminate tax evasion and duplicate bills, ”the Industry Federation said. The seminar on 'e-invoice' was held yesterday at RK Residency in Avinashi Road. Speaking about Direct Taxes, Sridhar, Director of BSR & Co, said: "Without the help of an auditor and consultant, the individual can easily file an income tax," the Finance Minister said.

Old taxation, which gives you the opportunity to deduct various expenses; The question of what to do with the new taxation, which is not tax deductible, is a matter of confusion for taxpayers; KPMG, India's Sandeep Kumar, on the e-invoices, said: “The Union Finance Minister first mentioned in the Budget speech, GST, Return filing Simplification is what it is; It will come into effect from April. The GST and Rebound procedures have all been onlineized. From April 1, companies with annual turnover of over Rs 100 crore will be forced to follow the 'e-invoice' policy.

The key to the implementation of 'E-Invoice' is the fake bill and tax evasion. This has caused the government to lose billions of rupees. With e-invoices, irregularities will be prevented. Nay. Generate receipts as usual and provide the information on the portal site. These three must be featured on an invoice; Otherwise, the invoice will be invalidated. Thus, he spoke. The owners of the Tirupur backlash company, the auditors participated, listened to their doubts and clarified.

No comments:

Post a Comment

Please Comment