சூரியக் குடும்பத்தைத் தாண்டி சென்ற விண்கலத்தைப் பூமியில் இருந்து பழுது பார்த்த நாசா
நாசாவால் ஏவப்பட்டு சூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று 11.5 லட்சம் கோடி மைல் தூரத்தில் பழுதான வாயேஜர் 2 விண்கலம் பூமியில் இருந்தே சரி செய்யப்பட்டுள்ளது.
சுமார் 41 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா வாயேஜர்2 என்னும் விண்கலத்தை ஏவியது.
இந்த விண்கலம் தொடர்ந்து பயணம் செய்து சூரியக் குடும்பத்தைத் தாண்டி இண்டர்ஸ்டெல்லர் என்னும் விண்வெளி நட்சத்திரப் பகுதியை 2017 ஆம் ஆண்டு அடைந்தது.
இது பூமியில் இருந்து இந்த பகுதியை அடைந்த 2 ஆம் விண்கலம் ஆகும்.
கடந்த மாதம் 28 ஆம் தேதி அன்று இந்த விண்கலம் திடீரென செயல் இழந்தது. இதற்கான காரணம் ஏதும் அப்போது கண்டறியப்படவில்லை. இது உலகத்தையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்ட கருவிகள் 360 டிகிரியில் சுற்றி அனைத்து ஆய்வுகளையும் செய்து வந்த போது இந்த விண்கலம் நகராமல் நின்றதால் ஆய்வும் தடைப்பட்டது.
இந்த விண்கலம் பூமியில் இருந்து 11.5 லட்சம் கோடி மைல்களுக்கு அப்பால் இருந்தது.
இங்கிருந்தே நாசா இந்த பழுதை சரி செய்யும் முயற்சியில் இறங்கியது.
இதற்கு இந்த விண்கலம் தன்னிடம் உள்ள மின் சக்தியை அதிக அளவில் பயன்படுத்தியதால் பாதுகாப்பு மென்பொருள் விண்கலத்தை நிறுத்தி விட்டது தெரிய வந்தது. இந்த மென்பொருள் இந்த விண்கலத்தில் அதிக அளவில் மின்சக்தி செலவாகும் போது இயக்கத்தை நிறுத்தும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.
நாசா அந்த விண்கலத்தில் அதிக மின்சக்தி செலவாவதைக் குறைக்க இங்கிருந்தே பணிகளை மேற்கொண்டது. இந்த பணியில் வெற்றி அடைந்ததை அடுத்து தற்போது இந்த வாயேஜர் 2 விண்கலம் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று இரவு 10 மணிக்கு இந்த பழுது சரி பார்க்கப்பட்ட தகவலை நாசா தனது டிவிட்டரில் வெளியிட்டது.
இந்த தகவல் தற்போது நாசாவால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாயேஜர் 2 விண்கலத்துக்கு அனுப்பப்படும் தகவல்கள் அங்குச் சேர 17 மணி நேரம் ஆகும். அதைப் போல் வாயேஜர் 2 விண்கலத்தில் இருந்து பதில் கிடைக்க மற்றொரு 17 மணி நேரம் ஆகும்.
இதற்கு வாயேஜர் 2 மற்றும் பூமிக்கு இடையில் உள்ள தூரமே காரணம் ஆகும். எனவே வாயேஜர் 2 அளித்த தகவல்கள் சரிபார்க்கப்பட்டு தற்போது நாசா இந்த தகவலை உறுதி செய்துள்ளது.
NASA has repaired the spacecraft that crossed the solar system
NASA's Voyager 2 spacecraft has been repaired from Earth, over 11.5 trillion miles from the Solar System. About 41 years ago, the US space agency NASA launched the Voyager 2 spacecraft. The spacecraft will continue to travel beyond the solar system and reach Interstellar Space Star in 2017.
This is the 2nd spacecraft to reach this part of the Earth. The spacecraft suddenly crashed on the 28th of last month. No reason has been found. This shocked the world. When the spacecraft's instruments were doing all the research around 360 degrees, the study was blocked because the spacecraft was not moving.
The spacecraft was 11.5 trillion miles from Earth. From here, NASA embarked on this task. It was reported that the security software had shut down the spacecraft as the spacecraft consumed too much electrical power. The software was designed to stop the shuttle from operating at high cost.
NASA has been working from here to reduce the cost of the spacecraft. The Voyager 2 spacecraft is now back in action after its success. On Wednesday night, at 10 pm, NASA released a tweet about the repair. This information is currently confirmed by NASA.
Information sent to the Voyager 2 spacecraft takes 17 hours to arrive there. It will take another 17 hours for the Voyager 2 spacecraft to respond. This is due to the distance between Voyager 2 and Earth. So the information provided by Voyager 2 has been verified and NASA has confirmed this information.

No comments:
Post a Comment
Please Comment