ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற வறுமை தடையில்லை - உதவி ஆட்சியர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற வறுமை தடையில்லை - உதவி ஆட்சியர்

‘இந்து தமிழ்’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ்’ அகாடமி இணைந்து நடத்திய வழிகாட்டு நிகழ்ச்சி ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற வறுமை தடையில்லை நெல்லை உதவி ஆட்சியர் நம்பிக்கை 


வறுமையான சூழலையும் எதிர்கொண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற முடியும் என்று, திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார். ‘இந்து தமிழ்’ நாளிதழ் ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து ‘ஆளப் பிறந்தோம்’ எனும் சிவில் சர்வீஸஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி யை கடந்த ஆண்டு தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்தியது. 2-வது ஆண்டாக இந்நிகழ்ச்சி நாகர்கோவில், மதுரை, கோவை, தஞ்சாவூர், சேலம், சென்னை, திருச்சி, திருநெல்வேலி உட்பட 13 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டு, அதில் முதல் நிகழ்ச்சி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. 

 பகுதி நேர வேலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ். பேசியதாவது: சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தேன். அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தேன். சிறந்த பொறியாளராக வேண்டும் என்ற இலக்குடன் படித்தேன். பள்ளியில் முதல் மாணவனாகவும் வந்தேன். வீட்டில் வைத்திருந்த விதை நெல்லை விற்று கல்லூரியில் சேர்வதற்கான பணத்தை திரட்டினேன். அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. 

அதேநேரம் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. இது எனக்கு கவலை அளித்தது. பொறியாளராக இல்லையென்றால் ஆட்சியராகி விடலாம் என்று தோன்றியது. அது எளிதா? என்ற அச்சமும் எனக்குள் இருந்தது. வீட்டு வறுமை சூழலை பொருட்படுத்தாமல் இரவு, பகலாக படித்தேன். தமிழ் மொழியில் படித்ததால், ஆங்கில மொழியில் திறமையை வளர்க்க பெரும் சிரமப்பட்டேன். படிப்பு செலவுக்காக மொபைல் ரீசார்ஜ் கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்தேன். அதில் கிடைத்த 300 ரூபாய் பேருதவியாக இருந்தது. 

வறுமையான சூழலையும் எதிர்கொண்டு நம்மால் படிக்க முடியும். விடா முயற்சியும், இலக்கு நோக்கிய பயணத்திலிருந்தும் தடம் மாறிவிடக் கூடாது என்றார் அவர். சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் எஸ்.ஆர். தீனதயாளன் வாழ்த்துரை வழங் கினார். ‘இந்து தமிழ்’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் அனை வருக்கும், அனைத்து தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத்திட்ட கையேடு இலவசமாக வழங்கப் பட்டது. இந்நிகழ்வை SAR டிவி மற்றும்  டிவி ஆகியவை இணைந்து வழங்கின. பிப்ரவரி 23-ல் மதுரையில் அடுத்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

Please Comment