புதிய கார்கள் வாங்குவோர் கவனத்திற்கு...
பி.எஸ்.4 வாகனங்கள் விற்பனை மற்றும் பதிவு செய்வதற்கான தடை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், தற்போது புதிய வாகனங்களை வாங்குபவர்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பி.எஸ்.4 வாகனங்களை விற்பதற்கும் பதிவு செய்வதற்கும் செப்டம்பர் 30 என்ற காலக்கெடு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், வாகன உற்பத்தியாளர்கள் வேண்டுகோளுக்கிணங்க அது மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தற்போது புதிதாக வாகனங்களை வாங்க விரும்புவோர் பி.எஸ்.4 விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் அவர்கள் தங்கள் வாகனங்களைக் கண்டிப்பாகப் பதிவு செய்தே ஆக வேண்டும்.
அதற்குப் பின் அவற்றைப் பதிவு செய்ய முடியாது. மேலும், அவ்வாகனங்கள் பயனில்லாமலேயே போய்விடும்.
இது தொடர்பாக, ஆர்.டி.ஓ. எனப்படும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பி.எஸ்.4 தொடர்பான உத்தரவை அவர்கள் கண்டிப்பாக வாகன சோதனையின்போது கவனிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
New Car Buyers ...
With the ban on the sale and registration of PS4 vehicles coming into effect from April 1, buyers of new vehicles are advised to be cautious. The September 30 deadline for selling and registering PS4 vehicles was already set. However, at the request of automakers, it has been extended until March 31. Those who want to buy new vehicles at the moment should be very careful about the PS4.
They must register their vehicles by March 31st. You cannot register them after that. Moreover, such observations will be ineffective. In this regard, the RDO has been working on this. Regional transport officials have been asked to remain vigilant. The PS4-related directive has been ordered that they must be observed during vehicle inspections.

No comments:
Post a Comment
Please Comment