பான் கார்டை எளிமையாகப்பெற புதிய கட்டமைப்பு
பான் கார்டு பெறுவது தொடர்பான நடை முறையை எளிமைப்படுத்தும் வகையில், ஆதார் அடிப்படையில் பான் கார்டு வழங்கப்படு வதற்கான கட்டமைப்பை மத்திய அரசு உருவாக்கும் என்று பட்ஜெட் அறிவிப்பில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட தொகைக்குமேல் வங்கிகளில் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு பான் கார்டு அவசியம். இந்நிலையில் பான் கார்டை உடனடியாக பெறும் வகையில் மத்திய அரசு புதிய கட்டமைப்பை உருவாக்க உள்ளது.
வரி தொடர்பான மதிப்பீடுகள் இனி முழுதுமாக டிஜிட்டல்மயாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய வழி வர்த்தக நிறுவனங்கள், அதன் விற்பனையாளர்ளுக்கான டிடிஎஸ்- ஐ பான் அல்லது ஆதார் கார்டு அடிப்படையில் பிடித்தம் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, பான் அல்லது ஆதார் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும்
பரிவர்த்தனைகளுக்கு 1 சதவீதம் அளவிலும், பான் அல்லது ஆதார் அல்லாத பரிவர்த்தனைக்கு 5 சதவீதம் அளவிலும் பிடித்தம் செய்யலாம் என்று கூறியுள்ளது.
‘விவாத் சே விஸ்வாஸ்’
வருமான வரி தொடர்பான வழக்குகளை தீர்த்துவைக்கும் வகையில் ‘விவாத் சே விஸ்வாஸ்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி வருமான வரி தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டு இருப்பவர்களின் வட்டி மற்றும் அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும். தற்போது 4.83 லட்சம் நேரடி வரி தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்தவகையில் இந்ததிட்டத்தின்கீழ் வரி செலுத்துபவர்கள், 31 மார்ச் 2020-க்குள் தங்கள் வரித்தொகையை மட்டும் செலுத்தினால் போதும். இந்த திட்டம் ஜூலை 30, 2020 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment