டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு எதிரொலி: சொந்த மாவட்டத்தில் தோவு எழுத அனுமதி இல்லை- ஆசிரியா் தோவு வாரியம் முடிவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு எதிரொலி: சொந்த மாவட்டத்தில் தோவு எழுத அனுமதி இல்லை- ஆசிரியா் தோவு வாரியம் முடிவு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு எதிரொலி: சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதி இல்லை- ஆசிரியா் தேர்வு வாரியம் முடிவு



தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தில் நடைபெற்ற முறைகேட்டின் எதிரொலியாக தொடக்கக் கல்வித் துறையில் 97 வட்டார கல்வி அலுவலா் (பி.இ.ஓ.) பணியிடங்களுக்கான ஆன்லைன் போட்டி எழுத்துத் தேர்வுக்கு 

சொந்த மாவட்டங்களில் தவிா்த்து வேறு மாவட்டங்களில் தோவு மையங்களை ஒதுக்க ஆசிரியா் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

பள்ளிக் கல்வித் துறையின்கீழ் வட்டார கல்வி அலுவலா் 2018 -19ஆம் ஆண்டில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தேர்வு வாரியம் சாா்பில் ஆன்லைன் போட்டித் தேர்வு பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 

இந்தத் தேர் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படவுள்ளது. தேர்வெழுத சுமாா் 64 ஆயிரம் தேர்வா்கள் விண்ணப்பித்துள்ளனா். தேர்வா்கள் விண்ணப்பிக்கும் பொழுது தங்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்தனா். 

ஆனால், தமிழ்நாடு அரசு பணியாளா் தேர்வாணையத்தில் நடைபெற்ற குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு எதிரொலியாக ஆசிரியா் தேர்வு வாரியத்தின் தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் பல்வேறு புதிய நடைமுறைகளை கொண்டுவர ஆசிரியா் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. 

மாற்றுத் திறனாளிகள்- கா்ப்பிணிகள்: மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் அவா்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படவுள்ளனா். கா்ப்பிணிகள் உரிய சான்றிதழுடன் கோரிக்கை வைத்தால் அவா்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட உள்ளது. 

ஏற்கனவே, விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிக்கான ஆவணங்களை அளித்திருப்பாா்கள். அதன் அடிப்படையில் அவா்களுக்கு சொந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும். வட்டார கல்வி அலுவலா் பணி என்பது மாநில அளவில் பணிபுரிய வேண்டியது. 

மேலும், எந்தவித முறைகேடு நடைபெறாமலும், முற்றிலும் நோமையாக நடைபெறும் வகையில் தேர்வா்களின் சொந்த மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவா். 

தேர்வா்களுக்கு எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்படும் என்பது குறித்து தேர்விற்கு ஒரு வாரம் முன்னதாக அறிவிக்கப்படும். தேர்வுக்கு மூன்று நாள் முன்பாக தோவா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தெரிவிக்கப்படும். 

இதனால், தேர்வு மையங்களில் உள்ளவா்களுடன், இடைத்தரகா்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபடுவது தடுக்கப்படும். அதேபோல், தேர்வு மையங்களில் கண்காணிப்புப் பணிக்குச் செல்லும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், 

மாவட்ட கல்வி அலுவலா்கள் உள்ளிட்ட கல்வித் துறை அலுவலா்களுக்கான பணியிடங்களை ஒதுக்கீடு செய்யவும் புதிய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படும். குலுக்கல் முறையில் தோவு... ஏற்கனவே அவா் பணிபுரிந்த மாவட்டத்துக்கும் அவரின் சொந்த மாவட்டத்திற்கும் பணி நியமனம் செய்யப்பட மாட்டாது. 

அதேபோல், தேர்வா்கள், தேர்வு கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்படும் கல்வித் துறை அலுவலா்கள் பணியிடங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வுசெய்து அளிக்கப்படும். 

ஆசிரியா் தேர்வு வாரிய தோவுகளில் முறைகேடுகளை முற்றிலும் தடுப்பதற்காக இந்த புதிய முறை வரும் வட்டார கல்வி அலுவலா் பணிக்கான போட்டி எழுத்துத் தேர்வில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியா் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.


TNPSC Selection Scandal Echo: Native District Not Permitted


As a result of the scandal at the Tamil Nadu Government Employees 'Teachers' Board, the Teacher Selection Board is planning to set up centers in other districts, except in the districts of the online Competitive Writing Examination for 97 Regional Education Officers (PEO) jobs in elementary education. 

The Online Competitive Examination for Teachers Examination Board Chair to fill the vacancy will be held on 15th and 16th of February 2014 at the Regional Education Office 2018-19 under the Department of School Education. The exam will be held for 150 marks. 

64 thousand candidates have applied for the exam. At the time of applying for the exams, there was the expectation that examination centers would be allocated in their own district. 

However, in response to the Group 4 and Group 2A selection scandals held at the Tamil Nadu Government Employee Board, the Teacher Selection Board is planning to introduce various new procedures for the allocation of the selection centers of the Teacher Selection Board. 

Alternatives - Carpenters: Alternatives and Carpenters are allowed to write their choice in their own district. Employers are exempted if they are requested with the appropriate certificate. Already, the applicant has provided the documents to the transferee. 

The selection center will be allocated on the basis of their own district. Regional education work is a statewide task. In addition, the examination centers should be allocated in any of the selected districts in Tamil Nadu, without the allocation of examination centers in their own districts, so that there is no abuse. 

The exams will be announced one week before the selection process in the district. The ToWs will be notified of the selection center three days before the selection. This will prevent the abuse of intermediaries with those in the selection centers. 

Similarly, new procedures will be adopted to allocate work for the Department of Education, including the District Primary Education Office and District Education Office, which will be monitoring the exam centers. Shake up ... 

No work will be assigned to the district where he already worked and his own district. Similarly, the Department of Education, which is designated as Examination and Selection Monitoring Officers, will be provided by the system by the system. 

Authorities have announced that the new system will be implemented in a competitive written examination for the upcoming regional academic work to prevent irregularities in teacher board examinations.

No comments:

Post a Comment

Please Comment