5, 8-ம் வகுப்புகளுக்கு
மாணவர்கள் நலன் கருதியே பொதுத்தேர்வு ரத்து
அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ஏன்?
5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ஏன்?
மாணவர்கள் நலன் கருதி 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப் பட்டுள்ளது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார்.
கோபி அடுத்த குள்ளம்பாளை யத்தில் அமைச்சர் செங்கோட்டை யன் செய்தியாளர்களிடம் கூறியதா வது:
5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட் டுள்ளது.
இத்தேர்வுக்காக மாண வர்களிடம் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூல் செய்திருந்ததால், அதை திருப்பி அளிக்க வேண் டும். பொதுத்தேர்வு ரத்து செய்யப் பட்டதற்கு எதிர்கட்சிகள் கார ணம் அல்ல. மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஊக்கத் தையும், ஆக்கத்தையும் தரும் அளவுக்கு மீண்டும் பயிற்சி அளித்து பரிசீலனை செய்யலாம் என்ற காரணத்தால் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து தற்போது வரைவு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
முழு விவரம் வந்தால்தான் அது குறித்து ஆய்வு செய்ய முடியும். கட்டாயக் கல்வி திட்டத் தில் மாணவர்கள் சேர்க்கையை கண்காணிக்கதான் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு கையெழுத்திட்டது காங்கிரஸ் ஆட்சிதான்.
அவர்கள்தான் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர் என்றார்.

No comments:
Post a Comment
Please Comment