காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் எப்போது? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் எப்போது?

காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் எப்போது?


தமிழகத்தில் அரசு ஆரம்ப பள்ளிகள் 23 , 928 , நடுநிலைப் பள்ளிகள் 7 , 260 , உயர் நிலைப் பள்ளிகள் 3 , 044 , மேல்நிலைப்பள்ளிகள் 2 , 727 ஆகியவை உள்ளன . இதில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரி யர்கள் பணியாற்றிவருகின்றனர். இவர்கள் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் கற்ப்பிகின்றனர் . கடந்த காலங்களில் பதிவு மூப்பு அடிப்ப டையில் பணிநியமனம் செய்து வந்தனர். 


பின்னர் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி ஆசிரியர்களை தேர்வு செய்து வருகின்றனர் . இந்நிலையில் ஆண்டுதோறும் இடைநிலைஆசிரியர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர் . மேலும் உபரி ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது . இதனால் இடைநிலை ஆசிரியர்களின் காலி பணியிடங்கள் அதிகரித்து வருகிறது . 

தற்போது மாநிலம் முழுவதும் 3 , 624 பணியி டங்கள் காலியாக உள்ளது . இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகா ரிகள் கூறியதாவது : மாநிலம் முழுவதும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மொத்தம் 3 , 624 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலி யாக உள்ளன . 

அதாவது , 
அரியலூர் மாவட் டத்தில் - 47 , 
கோவை - 56 , கடலூர் - 102 , 
தருமபுரி - 355 ,

 ஈரோடு - 108 , 
காஞ்சிபுரம் - 123 , 
கரூர் - 1 , 
கிருஷ்ண கிரி - 830 , 
நாகப்பட்டி னம் - 06 , 
நாமக்கல் - 49 , 
புதுக்கோட்டை - 75 , 
சேலம் - 138 , 
தஞ்சாவூர் - 44 , 
நீலகிரி - 25 , 
திருப்பூர் - 168 , 
திருவள்ளூர் - 82 , 
திருவண் ணாமலை - 578 , 
திருவாரூர் - 28 , 
வேலூர் 393 , 
விழுப்புரம் - 416 


ஆகிய மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளன . இந்த பணியிடங்களுக்கு வரும் ஜூன் மாதத்திற்குள் தேர்வு நடத்தி இடைநிலை ஆசியர்களை நியமனம் செய்யப்பட உள்ள னர் . அதற்காக தான் மாவட்ட வாரியாக காலி பணியிட பட்டியல் வெளியிடப்பட்டுள் ளது . இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment

Please Comment