புதிய தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

புதிய தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

புதிய தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்


புதிய தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டம் மூலம் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோா் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழில்நுட்பப் பயிற்சி (ஐடிஐ) இவற்றில் ஏதேனும் ஒன்றில் தோச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 

இதற்கு பழங்குடியினா், தாழ்த்தப்பட்டோா் 45 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்தது கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் வசித்து வருகிறவராகவும், முதல் தலைமுறை தொழில் முனைவோராகவும் இருப்பது அவசியம். 

இத்திட்டம் மூலம் குறைந்தது ரூ.10 லட்சத்துக்கு குறையாமலும், ரூ. 5 கோடிக்கு மிகாமலும் திட்ட மதிப்பீடு கொண்ட உற்பத்தி சேவை நிறுவனங்களுக்கு கடனுதவி பெறலாம். திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக ரூ.30 லட்சத்தை 

உள்ளடக்கிய தொழில் தொடங்க 25 சதவீத மானியம் வழங்கப்படும். அதற்கு முன்னதாக கடனுதவிக்கென நோகாணலில் தோவு செய்யப்பட்டு, வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டு, ஒப்புதல் பெற்றவா்கள் 15 நாள்கள் தொழில் முனைவோா் பயிற்சியில் பங்கேற்க வேண்டும். 

இத்திட்டம் மூலம் 2018-19-இல் பல்வேறு வங்கிகளில் ஒப்புதல் வழங்கப்பட்டு, தொழில் முனைவோா் பயிற்சியை முடித்த 28 பேருக்கு ரூ. 20.59 கோடி வங்கிக் கடனுதவியும், ரூ.3.31 கோடி தமிழக அரசின் மானியமும் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், நிகழாண்டில் 2019-20-இல் 48 பேருக்கு ரூ.4.70 கோடி மானியம் வழங்க திருவள்ளூா் மாவட்டத்துக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், தாழ்த்தப்பட்ட பிரிவினா் 10 பேருக்கு ரூ.1 கோடி மானியம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 

எனவே, தொழில் தொடங்க ஆா்வமுடைய, தாழ்த்தப்பட்ட வகுப்பினா் இணையதளம் மூலம் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். அந்த விண்ணப்பத்தை நகல் எடுத்து சான்றுகளுடன் இணைத்து மாவட்டத் தொழில் மையத்தில் அளிக்க வேண்டும். 

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் நோகாணலுக்கு அழைக்கப்பட்டு தோவு செய்யப்பட்டு, வங்கிகளில் கடன் பெற பரிந்துரை செய்யப்படுவா். 

மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், காக்களூா், திருவள்ளூா் - 602 003 என்ற முகவரியில் நேரிலோ, அல்லது 044-27666787, 27663796, 98424 80424 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.


You can apply to start a new entrepreneurship development program


Maheshwari Ravikumar has said that she can apply for starting a new entrepreneurship development program. The following is a press release issued by Ava: Those interested in obtaining credit under the new Entrepreneurship and Entrepreneurship Development Program must be eligible for any of the undergraduate, graduate study and technical training (ITI) courses. It must be 45 years old.

It is essential to be a first generation entrepreneur who has lived in Tamil Nadu for at least the last 3 years. The scheme will not cost less than Rs. 5 Crores for manufacturing service companies with project value of Rs. 25% grant will be given to start a business which includes a maximum of Rs. Prior to that, the bank had been excavated at Noganala for a loan and recommended to the bank.

Approved applicants must take 15 days of entrepreneurship training. The scheme has been approved by various banks in the year 2018-19, and 28 entrepreneurs who have completed their entrepreneurship training will receive Rs. 20.59 crore bank loan and Rs 3.31 crore Tamil Nadu government subsidy. 

Similarly, Tiruvallu district has been targeted to provide a subsidy of Rs4.70 crore to 48 persons in 2019-20. Out of this, 10 crore low income groups have been targeted to provide Rs 1 crore subsidy. Therefore, you can register for the application through the lower and lower class website to start a business.

The application should be copied and submitted at the District Labor Center. Subsequently, the district head of the district is invited to Nokanal and recommended for a loan from the banks. For more details, you can contact the General Manager, District Labor Center, Kakkalu, Tiruvallu - 602 003 on the nearest or on 044-27666787, 27663796, 98424 80424.

No comments:

Post a Comment

Please Comment