ஸ்மார்ட்போன் பற்றிய ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர். சார்லஸ் ஜெர்பா ஸ்மார்ட்போன்களின் மூலம் பரவும் நோய்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். ஆய்வு முடிவில் ஸ்மார்ட்போன்கள் கழிவறைகளை விட பெருமளவு கிருமிகளை கொண்டிருப்பதாக சார்லஸ் தெரிவித்து இருக்கிறார்.
ஆய்வின் போது சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 25 ஸ்மார்ட்போன்களில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை ஒரு சதுர அடிக்கு 25,127 கிருமிகளை கொண்டிருப்பதாக சார்லஸ் தெரிவித்து இருக்கிறார்.
டெஸ்க்டாப் எனப்படும் கணினிகளில் ஒரு சதுர அடிக்கு 20,961 கிருமிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. பொதுவாக கழிவறைகளில் ஒரு சதுர அடிக்கு 49 கிருமிகளே காணப்படுகின்றன.
அந்த வகையில் கிருமிகளின் எண்ணிக்கையை வைத்தே ஸ்மார்ட்போன்கள் எந்தளவு சுத்தமாக இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இதனால் ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் அங்கமாக சார்ஜ் செய்வதோடு மட்டுமின்றி அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் இந்த ஆய்வு அறிக்கை உணர்த்துகிறது.
ஸ்மார்ட்போன்களில் கிருமிகள் தொற்றாமல் இருக்க என்ன செய்யலாம்?
ஸ்மார்ட்போன்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அடிக்கடி கைகளை கழுவ வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ஒரு நாள் பொழுதில் பலமுறை கைகளாலேயே ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதனாலேயே கைகளை அடிக்கடி கழுவுதல் ஸ்மார்ட்போனை சுத்தமாக வைத்துக் கொள்வதில் முதல் படியாக இருக்கிறது.
ஸ்மார்ட்போன்களை சுத்தமாக வைத்துக் கொள்ள சந்தையில் பல்வேறு பொருட்கள் கிடைக்கின்றன.
இவற்றில் முதன்மையான ஒன்றாக ஆல்கஹால் வைப் இருக்கின்றன. இவற்றை கொண்டு நாள் பொழுதில் கிறுமிகளை கொன்றுகுவிக்கலாம். இது அதிகளவு பயன்தரும் ஒன்றாக இருக்கிறது.
ஆபத்து காலங்களில் அழைப்புகளை மேற்கொள்ள மற்றவரிடம் ஸ்மார்ட்போனை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் அவருக்காக அழைப்பை மேற்கொண்டு ஸ்மார்ட்போனை ஸ்பீக்கர் அல்லது ஹெட்போன் மூலம் பேச வைக்கலாம்.
ஸ்மார்ட்போனினை சானிடைஸ் செய்யும் போது இது பெரிய விஷயமாக இருக்காது.
சாப்பிட அமரும் முன் ஸ்மார்ட்போன்களை வைத்துவிட்டு, கைகளை நன்கு கழுவ வேண்டும்.
சாப்பிட அமரும் போது ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டாம். மேலும் சாப்பிட்டு முடிக்கும் வரை ஸ்மார்ட்போனை கையில் எடுக்க வேண்டாம்.
Shocking info on smartphone study!
Doctor from the University of Arizona Charles Zerba conducted a study on diseases transmitted through smartphones. Charles reports that smartphones have far more germs than toilets at the end of the study. More than 50 per cent of the 25 smartphones tested during the study had 25,127 germs per square foot, Charles said.
Desktops have been found to contain 20,961 germs per square foot. There are usually 49 germs per square foot in toilets. With the number of germs in place, you can understand how clean smartphones are. The report also highlights the need to keep smartphones clean and clean as part of the smartphone application.
What can smartphones do to prevent germs? Washing your hands frequently is essential to keeping smartphones clean. Smartphones are used by the hands many times a day. This is why frequent washing of hands is the first step in keeping a smartphone clean. There are various products available in the market to keep smartphones clean.
Alcohol is one of the first of these. These can kill the shrimp during the day. It is very useful. In the event of a need to give the smartphone to someone else to make calls in times of danger, you can make a call and talk to the speaker or headphone.
This is no big deal when it comes to sanitizing a smartphone. Put smartphones on before eating and wash your hands thoroughly. Do not use a smartphone while eating. Do not carry a smartphone until you have finished eating.

No comments:
Post a Comment
Please Comment