தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு

வரலாறு காணாத விலை உயர்வு தங்கம் பவுன் ரூ.32 ஆயிரத்தை தாண்டியது ஒரே ஆண்டில் பவுனுக்கு ரூ.6,750 கூடியது 

 வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் தங்கம் ரூ.32 ஆயிரத்தை தாண்டியது. கடந்த ஒரே ஆண்டில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.6,750 அதிகரித்துள்ளது. தங்கம் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தை தாண்டியது. 

அதன் பின்னர் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. டிசம்பர் மாதம் 18-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.29 ஆயிரத்தை அடைந்தது. இந்த நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயரத்தொடங் கியது. கடந்த மாதம் 3-ந் தேதி ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 520-க்கும், 6-ந் தேதி ரூ.31 ஆயிரத்து 168-க்கும் விற்பனையானது. பவுன் ரூ.32,408-க்கு விற்பனை அதன் பின்னர் தங்கம் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. கடந்த 17-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 902-க்கும், ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்து 216-க்கும் விற்பனை ஆனது. இது படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்தது. 

நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 978-க்கும், ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்து 824-க்கும் விற்பனை ஆனது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.73-ம், பவுனுக்கு ரூ.584-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 51-க்கும், ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்து 408-க்கும் விற்பனையானது. பவுன் ரூ.32 ஆயிரத்தை கடந்து தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. 

தங்கம் விலை உயர்வு, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒரே ஆண்டில் ரூ.6,750 கூடியது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 206-க்கும், ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 648-க்கும் விற்பனையானது. ஒரு ஆண்டில் மட்டும் தங்கம் கிராமுக்கு 845-ம், பவுனுக்கு ரூ.6 ஆயிரத்து 750-ம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. 

 நேற்று முன்தினம் ஒரு கிராம் வெள்ளி 51 ரூபாய் 60 காசுக்கும், ஒரு கிலோ ரூ.51 ஆயிரத்து 600-க்கும் விற்பனையானது. நேற்று கிராமுக்கு 90 காசும், கிலோவுக்கு ரூ.900-ம் அதிகரித்து ஒரு கிராம் 52 ரூபாய் 50 காசுக்கும், ஒரு கிலோ ரூ.52 ஆயிரத்து 500-க்கும் விற்பனையானது. காரணம் என்ன? இதுகுறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது:- 

 உலகம் முழுவதும் கொரோனா ரைவஸ் பீதி பரவி உள்ளது. இதன் தாக்கம் பங்கு சந்தையிலும் எதிரொலித்திருக்கிறது. தோல் மற்றும் தோல் சார்ந்த பொருட்களில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது தங்களுடைய பார்வையை திருப்பி இருக்கிறார்கள். ஈரான் உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் அதிக அளவில் தங்கத்தின் மீது முதலீடு செய்கிறார்கள். இதேபோல அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் தங்கம் விலை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment