அரசு பஸ்களில் இன்ஜின் பேனட் மீது பெண்களை அமர வைக்கக்கூடாது: போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசு பஸ்களில் இன்ஜின் பேனட் மீது பெண்களை அமர வைக்கக்கூடாது: போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு

அரசு பஸ்களில் இன்ஜின் பேனட் மீது பெண்களை அமர வைக்கக்கூடாது: போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு



சேலம்: அரசு பேருந்துகளில் பஸ் இன்ஜின் பேனட் மீது பெண் பயணிகளை அமர வைக்க கூடாது என்று போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சென்னை, விழுப்புரம், சேலம், திருச்சி, மதுரை, கோவை, கும்பகோணம், திருநெல்வேலி என்று 8 கோட்டங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த கோட்டங்களில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

இதைதவிர அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் இயங்கும் அரசு, தனியார் பஸ்களில் அமர இருக்கை கிடைக்காத பயணிகள் சிலநேரங்களில் டிரைவர் சீட் அருகேயுள்ள இன்ஜின் பேனட் மீது அமர்ந்து பயணம் செய்கின்றனர். 

இதில் ஆண்களைவிட, பெண்களே அதிகளவில் இன்ஜின் பேனட்டில் அமர்ந்து பயணம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு பயணம் மேற்கொள்ளும் பயணிகளிடம் டிரைவர்கள் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குகின்றனர். 

இதன் காரணமாக சில நேரங்களில் விபத்துகளும் நேர்ந்து விடுகிறது. எனவே இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அந்த உத்தரவில் ''ஓட்டுநர் இருக்கைக்கு அருகே அமைந்துள்ள இன்ஜின் பேனட் மீது பெண்களை அமர வைக்கக் கூடாது. ஓட்டுநர்கள், பெண்களிடம் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குவதாக புகார் வந்துள்ளது. 

இது தொடர்பாக தொடர்ந்து புகார் வரும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: அரசு பஸ்களில் இன்ஜின் பேனட் மீது பயணிகள் அமர்ந்து பயணம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இவ்வாறு பயணம் செய்யும்போது டிரைவர்கள் அவர்களிடம் பேச்சு கொடுக்கின்றனர். இதன் காரணமாக அவர்களின் கவனம் சிதறி சில நேரங்களில் விபத்து நேர்ந்துவிடுகிறது. இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கவும், 

பயணிகளின் நலனுக்காகவும் டிரைவர் சீட் அருகேயுள்ள இன்ஜின் பேனட் மீது ெபண்கள் அமர்ந்து பயணம் செய்ய அரசு போக்குவரத்து கழகம் தடை விதித்துள்ளது. 

சேலம் கோட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே டிரைவர்களுக்கு இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


Women should not sit on state-run buses: Transport Corporation Action Directive


Salem: Bus operators have been ordered by the Transport Corporation not to sit on the bus engine banner in state buses. The Tamil Nadu State Transport Corporation operates eight forts in Chennai, Villupuram, Salem, Trichy, Madurai, Coimbatore, Kumbakonam and Tirunelveli. More than 22 thousand buses operate in these forts. In addition, more than one thousand buses are operated by the Government Fast Traffic Corporation.

Travelers who do not have a seat in the state and private buses in Tamil Nadu sometimes sit on the engine seat near the driver's seat. In this case, females are more likely to sit on the engine panel than males. Drivers are talking to passengers who are driving the vehicle. As a result, sometimes accidents happen. Therefore, the Tamil Nadu State Transport Corporation has issued an Action Directive to avoid such accidents.

The order said: “Women should not be seated on the engine seat located near the driver's seat. There have been complaints that drivers are talking to women and operating the vehicle. If there are ongoing complaints, departmental action will be taken. ” Officials of the Tamil Nadu State Road Transport Corporation (KSRTC) said: “The number of passengers sitting on the state-run buses on the engine banet is increasing day by day.

Drivers talk to them while traveling. As a result, their focus is distracted and sometimes accidental. In order to avoid such accidents and for the benefit of passengers, the state transport corporation has banned people from sitting on the engine seat near the driver's seat. Drivers have already been advised of this in the case of Salem Fort. Steps will be taken to tighten this up. Thus said the authorities.

No comments:

Post a Comment

Please Comment