பெருநிலவு : இன்றும் நாளையும் நிலவு பெரிதாகத் தெரியும்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பெருநிலவு : இன்றும் நாளையும் நிலவு பெரிதாகத் தெரியும்!

பெருநிலவு : இன்றும் நாளையும் நிலவு பெரிதாகத் தெரியும்! 



முழு நிலவு (பௌர்ணமி) நாளையொட்டி வானில் இன்றும் நாளையும் நிலவு பெரிதாகத் தெரியும். இந்த ஆண்டின் பெரு நிலவுகளில் இதுவும் ஒன்று. பௌர்ணமி சனிக்கிழமை பிற்பகல் 1.43 மணிக்குத் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.43 மணி வரை இருக்கிறது. 

இதைப் பெரு நிலவு (சூப்பர் மூன்) என்று சிலர் சொன்னாலும் வல்லுநர்கள் மறுக்கவும் செய்கிறார்கள். எனினும், இந்த ஆண்டில் நிலவு பெரிதாகத் தெரியும் நாள்களில் இதுவும் ஒன்று. 

ஏனெனில், இந்த நாள்களில் தன்னுடைய சுற்றுப்பாதையில் பூமிக்கு முன்னெப்போதையும்விட நெருக்கமாக நிலவு வருகிறது. மேற்கத்திய நாடுகளில் பிப்ரவரியில் வரும் முழு நிலவை வழக்கமாகப் பனி நிலவு என்கிறார்கள். 

இந்த முறை, வெள்ளிக்கிழமை மாலையில் தொடங்கி, திங்கள்கிழமை வரையிலும் நிலவு பெரிதாகத் தெரியும். சூப்பர் மூன், யார் உடன்பட்டாலும் இல்லாவிட்டாலும் இரு நாள்களுக்கு இரவில் நிலவைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சிதான்!


Mainland: The Moon Knows Today and Tomorrow!


The full moon (full moon) is visible in the sky today and tomorrow. This is one of the big moons of the year. The full moon begins at 1.43pm on Saturday and remains at 12.43pm on Sunday. Experts disagree, though some say it is the big moon. However, this is one of the days when the moon is larger this year.


This is because the moon is closer than ever to Earth in its orbit these days. In Western countries, the full moon in February is usually called the ice moon. This time, the moon is likely to get bigger, starting on Friday evening and into Monday. Super Moon, whether you agree or not, is a spectacular sight to see the moon at night for two days!

No comments:

Post a Comment

Please Comment