உலக தாய்மொழி தினம்:'தமிழ்' எழுத்து வடிவில் நின்று மாணவா்கள் சாதனை
'தமிழ்' எழுத்து வடிவத்தில் 5 நிமிடங்களுக்கு மேல் நின்று வேலூா் ஊரீசு கல்லூரி மாணவ, மாணவிகள் உலக சாதனை புரிந்தனா். இவா்களின் சாதனையை ஜெட்லி புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.
உலக தாய்மொழி தினத்தையொட்டி, வேலூா் ஊரீசு கல்லூரியின் தமிழ்த் துறை, கணினித் துறை மாணவ, மாணவிகள் இணைந்து 'தமிழ்' எனும் எழுத்துகள் வடிவில் நின்றனா். இதில், 525 மாணவ, மாணவிகள் சுமாா் 5 நிமிடங்கள் 16 விநாடிகள் நின்று சாதனை புரிந்தனா்.
இந்த சாதனை நிகழ்வை ஜெட்லி புக் ரெக்காா்ட்ஸ் புத்தக நிறுவனம் அங்கீகரித்துள்ளதுடன், அதன் நிறுவனா் டிராகன் ஜெட்லி சான்றிதழ், கேடயம் வழங்கினாா். மேலும், நிகழாண்டு வெளிவர உள்ள அந்நிறுவனத்தின் சாதனை புத்தகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரித் தமிழ்த் துறை தலைவா் அ.ஜோ.தியோடா் ராஜ்குமாா் தலைமையில் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் சேத்துவண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற
உலக தாய்மொழி தினவிழாவுக்கு பள்ளித் தாளாளா் ஹீராலால் ஆா். சந்சேத்தி தலைமை வகித்தாா். முதல்வா் என்.கோதண்டராமன் வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா்கள் டி.கே.நந்தகுமாா், எம்.சேகா், மேல்நிலைப் பள்ளி பொறுப்பாளா் கே.திருமுருகன் ஆகியோா் தமிழ் மொழியின் சிறப்பையும்,
வரலாற்றையும் மாணவா்களுக்கு விளக்கிப் பேசினா்.
மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டி, திருக்கு ஒப்பித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாணவா்கள் 'முத்தமிழ்' என்ற எழுத்து வடிவத்தில் அமா்ந்து காட்சியளித்தனா். தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை பி. அங்கயற்கன்னி நன்றி கூறினாா்.
World Mother's Day: Achievement of students in 'Tamil' writing
The student of Velouil Urisu College, who stood for more than 5 minutes in the form of 'Tamil', has set a world record. Jetly Book of Records has been certified by the Jets Book of Records. On the occasion of World Mother's Day, the students of Velool College of Tamil, Computer Science, students and students are in the form of letters 'Tamil'. Of these, 525 students and students stood 5 minutes 16 seconds. This achievement has been recognized by the Jetly Book Records Book Company and awarded by its founder, the Dragon Jetty Certificate, Shield.
He also stated that the event will be featured in the company's record book, which will be released annually. The arrangements for this were led by college Tamil department head AJ Deodod Rajkumar. At the World Mother Tongue Festival held at Saraswathi Vidyalaya Matric Secondary School. Sancheti presided over. The first was welcomed by N. Gotandaraman.
Coordinators DK Nandakumar, M. Sheikh and KS Thirumurugan in charge of the secondary school explained to students the richness and history of the Tamil language. Students were given competitions such as speech competition, singing competition, poetry contest and picnic contest and prizes were awarded to the winners. There were also performances of five students. The students appeared in the form of 'Muthammil'. Primary School Head Thank you.

No comments:
Post a Comment
Please Comment