தினம் ஒரு தகவல் சுவாசித்தலும் பாதிப்புதான்
பொதுவாக பூச்சிக் கொல்லிகள் பயிர்களில் தெளிக்கப் பயன்படுகின்றவோ இல்லையோ, உயிரினங்களைக் கொல்ல நிச்சயம் பயன்படுகின்றன. உலகம் முழுவதும் இந்த கொடுமை அதிகமாகி வருவதை உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது.
பூச்சிக்கொல்லிகளால் மனிதர்களும்
பாதிக்கப்படுகிறார்கள். பூச்சிக்கொல்லி மருந்துகளை உட்கொண்டால் சாவு உறுதி என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், பூச்சிக்கொல்லிகளுடன் நீண்ட நேரம் உறவாடினாலும் ஆபத்துதான்.
அதாவது பூச்சிக் கொல்லிகளை தொடர்ந்து தெளிப்பதாலும், அதை சுவாசிப்பதாலும் ஒரு வகையான மன அழுத்தம் ஏற்படுகிறது என்று தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஹார்வர்டு மருத்துவ பள்ளியின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பீட்டர் என்ற உழவரின் தற்கொலையைப் பற்றி ஆய்வு செய்து ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இதேபோன்று கேரளத்தில் உள்ள காசர்கோடில் முந்திரி தோட்டங்களில் தெளித்த கொடிய பூச்சிக்கொல்லியால் ஏற்பட்ட பின்விளைவுகளில் ஒன்றாக தற்கொலை தூண்டல் என கூறப்பட்டது. ஆனால், அது குறித்த விரிவான ஆய்வுகள் செய்யப்படவில்லை.
பூச்சிக்கொல்லிகள் நரம்பு மண்டலத்தை தாக்குகின்றன. இதனால் மனதில் ஒரு வகை அழுத்தம் ஏற்படுகிறது.
தொடர்ந்து பூச்சிக்கொல்லி தெளிப்புக்கு உள்ளாகும் போது இந்த அழுத்தம் அதிகமாகி கொண்டே செல்கிறது. இது மனித வாழ்வில் தொடர்ந்து அச்சுறுத்தும் நஞ்சு என்று புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனமான தேசிய உடல்நலப் பயிற்றகம் தெரிவிக்கிறது. அது மட்டுமல்லாமல், வேளாண் சமூகத்தில் மட்டுமே அதிகமாக தற்கொலைகள் நடப்பதையும் இது உறுதிப்படுத்துகிறது.
இந்த பூச்சிக்கொல்லிகளை சுவாசித்தால் மட்டுமல்ல, தோலின் மீது பட்டாலும் ஆபத்து என்று தயாரிப்பாளர்களே குறிப்பிடுகிறார்கள். நமது நாட்டில் யாரும் முகமூடி அணிந்துகொண்டு பூச்சிக்கொல்லி மருந்தை தெளிப்பது கிடையாது, அது மட்டுமல்ல பூச்சிக்கொல்லிகளை நீருடன் சேர்த்து கையால் கலக்குகின்றனர். இப்படி பூச்சிக்கொல்லிகள் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் நமது சூழலில் தெளிக்கப்படும் இந்த நஞ்சுகள், ஒரு கட்டத்தில் நம்மில் பலரையும் பாதித்துவிடும் என்பதே உண்மை.
Breathing an information every day is also affecting
Insecticides are usually used to kill organisms, whether sprayed on crops or not. The World Health Organization is pointing out that this atrocity is on the rise worldwide. Humans with pesticides
Affected. We all know that ingestion of pesticides is certain to cause death. But long-term contact with pesticides is a risk. Researchers say that the constant spraying and inhalation of pesticides causes a kind of stress. An article has been written examining the suicide of Peter, a farmer, based on the Harvard Medical School report.
Suicide triggering was one of the consequences of a deadly pesticide sprayed on cashew plantations in Kasaragod, Kerala. However, no detailed studies have been conducted on it. Pesticides attack the nervous system. This causes a kind of stress in the mind.
This pressure is exacerbated when the pesticide is constantly sprayed. It is the poison that continues to poison human life, according to the National Institutes of Health, the renowned American institution. Not only that, but it also confirms that the suicide rate is the highest in the agricultural community.
The manufacturers refer to these pesticides as a danger not only of breathing but also of the skin. In our country, no masks are sprayed with pesticides, and only pesticides are mixed with water. It is true that these poisons, sprayed on our environment without awareness of pesticides, can affect many of us at one time.

No comments:
Post a Comment
Please Comment