*5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து - தமிழக அரசு*
🔥
🛡 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென ஆசிரிய இயக்கங்களும், கல்வியாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
🔥
🛡 இதனிடையே பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் லூயிஸ் தொடர்ந்த வழக்கில், வழக்கறிஞர் லஜபதிராய் முன்வைத்த வாதங்களை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சரமாரியான கேள்விகளை அரசிடம் எழுப்பியிருந்தது.
🔥
🛡 நேற்று 03.02.2020-ல் அறிக்கை வெளியிட்டிருந்த பள்ளிக் கல்வித்துறை ஆணையரும் பொதுத் தேர்வை நியாயப்படுத்தியே குறிப்பிட்டிருந்தார்.
🔥
🛡 இந்நிலையில், இன்று (04.02.2020) 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்வது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,
🔥
🛡 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பழைய நடைமுறைகளின் படியே ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment