TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு!
தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 16ம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் மின்னியல் பிரிவில் 400 காலியிடங்களும்,
இயந்திரவியல் பிரிவில் 125 காலியிடங்களும், கட்டிடவியல் பிரிவில் 75 காலியிடங்களும் நிரப்பப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 8 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விண்ணப்பப்பதிவு கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் பிப்ரவரி 24 என்று அறிவிக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது.
இருப்பினும், இதுகுறித்தான முறையான அறிவிப்பு இல்லாத காரணத்தினால் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில் மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்குக் கடைசி தேதி மார்ச் 16 ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கு மார்ச் 19 ஆம் தேதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
TNEB TANGEDCO: Last date for applying for Electricity Assistant job extension!
Tamil Nadu Power Station has been extended till March 16 to apply for vacancies. 400 vacancies in the Electrical section, 125 vacancies in the Mechanical section and 75 vacancies in the Architecture Division. The announcement was made on January 8. Following this, the application deadline has been announced from January 24 to February 24.
However, due to the lack of a formal notification, there have been requests from various parties to extend the deadline for application. In this case, the last date for applying for the electrical service assistant has been extended till March 16. The deadline for making the selection deadline is March 19.

No comments:
Post a Comment
Please Comment