ஆன்லைனில் எப்படி விசா (Visa ) பெறுவது ? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆன்லைனில் எப்படி விசா (Visa ) பெறுவது ?

ஆன்லைனில் எப்படி விசா (Visa ) பெறுவது ?



நாம் வெளிநாட்டுக்கு செல்லவேண்டும், என்றால், பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்தால் அது தவறு அதற்க்கு மிக முக்கியமாக தேவைப்படுவது விசா Visa மிக முக்கியமாகும் அதை நீங்கள் வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு இது மிக அவசியமாகும் 

அது எப்படி கிடைக்கும் அதும் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் எப்படி அப்ளை பண்ணுவது என்று பார்ப்போம் வாருங்கள். விசா பெறுவதற்கான வலைதளம் முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். 

விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். 

பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது. குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன. 

இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (https://www.visamapper.com) வலைத்தளம் அமைந்துள்ளது. எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், 

எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது. 

இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். 

உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

சிவப்பு என்றால் விசாவே கிடையாது. ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். 

இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது. 

உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. 

ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா? அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, 'நான் இந்த நாட்டு குடிமகன்' என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம்.

இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். 

உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. 

தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 

இதைப் போலவே விசாமேப்.நெட் (https://www.visamap.net) எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. 

ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும். வெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கும், போக இருப்பவர்களுக்கும் இந்தத் தளங்கள் பயனுள்ளவைகளாக இருக்கின்றன.


How to get Visa online?

Visa is very important. It is very important for those who are planning to go abroad. Visa Website First you need to know if the country you are traveling to is a visa. You need to know how to apply for a visa. A few countries do not require a visa. Visas can be obtained on arrival to a few countries.

Most countries require a visa in advance. It can change from country to country. Only certain countries offer visa-free concessions. The procedures for a visa are many. Vismapper.com (https://www.visamapper.com) is a place where you can find all of this information and find it on the web. This site provides information about which countries can go without a visa and where you can go and get a visa.

How to do that, without knowing much about what it takes to know visa details on the world map. Countries are indicated in different colors on the world map appearing on this site. The meaning of those colors is given in the adjacent phases. With these colors one can know the visa procedure of a particular country. For example, you can go there and get a visa for the green glittering countries. Visa should be obtained in advance if maroon color. Do not Visa if it is light green. If yellow, apply online. There is no visa if red. So one can see the visa system for the country in which you are traveling.

Another highlight on this map is that you don't have to search, it just shows the details. This means that the user entered the site and maps the visa process for that country by understanding which country the user is looking for. For example, when used from India, India is shown as a country of residence. The colors of how other countries give visas to Indians are shown in colors. Thus, when the beneficiary approaches from another country, the visa map for his country will appear.

Isn't that wonderful? At the same time, when a person selects his or her own country on the map and says 'I am a citizen of this country', the visa procedure for that country can be known. If you click on different countries in this area you can find information about which countries offer visa. It is also a symbolic study of world politics. It is also possible to know the world political reality. This site is definitely helpful for those who want to know about Visa. But either way, this is just a guidebook. The details are not official.

It is good to know the information easily and confirm it through official sites. Also on this site, the missing country is provided with the ability to add information or correct information. Similarly, the website Vismap.Net (https://www.visamap.net) provides visa-related information. Provides visa information, such as where the embassy units are located. There is also a list of popular countries on visa. There’s also a processor format for the iPhone. But this site is also a guide. The information contained herein should be ascertained. These sites are useful for those who are looking to go abroad and for those who are going abroad.

No comments:

Post a Comment

Please Comment