வரலாற்றில் இன்று 08.03.2020 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வரலாற்றில் இன்று 08.03.2020

நிகழ்வுகள்:

1618 – ஜொஹான்னெஸ் கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.

1761 – வடக்கு லண்டனில் ஹாம்ப்ஸ்டட் நகரில் நிலநடுக்கம் பதியப்பட்டது.

1782 – ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய 90 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.

1817 – நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.

1906 – பிலிப்பைன்சில் அமெரிக்கத் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

1911 – அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.

1917 – ரஷ்யாவில் பெப்ரவரிப் புரட்சி (பெப்ரவரி 13 – பழைய நாட்காட்டியில்) ஆரம்பம்.

1921 – ஸ்பெயின் பிரதமர் எடுவார்டோ டாட்டோ மாட்ரிட்டில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

1924 – யூட்டாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 172 பேர் கொல்லப்பட்டனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: ஜாவாவில் ஜப்பானியப் படைகளிடம் டச்சுப் படைகள் சரணடைந்தனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை ஜப்பான் கைப்பற்றியது.

1950 – சோவியத் ஒன்றியம் தன்னிடம் அணுக்குண்டு இருப்பதாக அறிவித்தது.

1957 – எகிப்து சூயஸ் கால்வாயை மீண்டும் திறந்தது.

1965 – வியட்நாம் போர்: 3,500 அமெரிக்கப் படைகள் தென் வியட்நாமில் தரையிறங்கினர்.

பிறப்புக்கள்:

1879 – ஓஒட்டோ ஹான், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1968)

1886 – எட்வர்ட் கெண்டல், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1972)

1908 – பாலகங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.

இறப்புகள்:

1922 – சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர், ஈழத்துப் புலவர் (பி. 1854

1923 – ஜொஹானஸ் வான் டர் வால்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1837)

1974 – ஜே. பி. சந்திரபாபு, பாடகர், நடிகர் (பி. 1924)

2004 – அபூ அப்பாஸ், பாலஸ்தீன விடுதலை முன்னணி தாபகர் (பி. 1948)

2015 – கி. பி. அரவிந்தன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர், ஈழ விடுதலைப் போராளி (பி. 1953)

சிறப்பு நாள்:

அல்பானியா, ரோமானியா – அன்னையர் நாள்

ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்.

No comments:

Post a Comment

Please Comment