இன்றைய செய்திகள் 12.03.2020 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இன்றைய செய்திகள் 12.03.2020

இன்றைய செய்திகள் 12.03.2020(வியாழக்கிழமை)


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 🍒🍒மாணவர்கள் , பெற்றோர்களுக்கு உளவியல் குறித்த ஆலோசனைகள் வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வி துறை உத்தரவு
🍒🍒6 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ , மாணவியருக்கு shoes மற்றும் socks வழங்க தேவைப்பட்டியல் கோரி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு
🍒🍒2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் அரசிதழில் வெளியீடு
முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது
🍒🍒கொரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரி மாநிலம் மாகேவில் உள்ள கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு மார்ச் 31 வரை விடுமுறை
🍒🍒நினைத்ததை விட ஆபத்து அதிகம்' - கொரோனா குறித்து ஆய்வு கூறும் அதிர்ச்சித் தகவல்கள்
🍒🍒சென்னை மண்ணடியில் 27வது நாளாக நடைபெற்று வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆதரவு
🍒🍒இருமலுடன் தொடங்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூனை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு
🍒🍒கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துகள் முதன்மையாக இருக்க வேண்டும்
- தமிழக அரசு
🍒🍒பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்
🍒🍒புதிதாக 5 நாடுகளுக்கு பரவிய கொரோனா - கடந்த 24 மணி நேரத்தில் 4125 பேருக்கு பாதிப்பு:      இது குறித்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள கணக்கெடுப்பில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் புதிதாக புருனே, தருஸ்சலாம், மங்கோலியா, சைப்ரஸ், பனாமா ஆகிய 5 நாடுகளுக்கு பரவியதாக கூறப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து 702 என்றும், இதில் புதிதாக 4 ஆயிரத்து 125 பேரும் அடங்குவர் என கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கொரோனாவால் 203 பேர் உயிரிழந்ததால், எண்ணிக்கை 4 ஆயிரத்து 12 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் சீனாவில், கடந்த 24 மணி நேரத்தில்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆக உள்ளது.                                                🍒🍒நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு  வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.    -கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு.
🍒🍒தென் கொரியாவில் நேற்று ஒரே நாளில், 242 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இதன் மூலம் தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,755 அதிகரிப்பு; இதுவரை 60 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
- தென்கொரிய அரசு                                                                              🍒🍒இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு. பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் குணமடைந்துவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
🍒🍒கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவிவருவதால், அங்கிருந்து தமிழகத்துக்கு கொண்டுவரப்படும் கோழிகள் மற்றும் முட்டைகள் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருவதாக, தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🍒🍒கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிப்பு: ஸ்பெயின், ஜெர்மனி , பிரான்ஸ் நாடுகளுக்கும் விசா மறுப்பு- மத்திய அரசு நடவடிக்கை
🍒🍒தமிழகத்தில் வரும் 27-ஆம் தேதி முதல் திரைப்படங்களை வெளியிடமாட்டோம் என திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு. விநியோகஸ்தர்களுக்கான வரியை ரத்து செய்ய தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.
🍒🍒தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம். புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்.
🍒🍒கொரானா வைரஸ் தாக்கம் எதிரொலியாக சபரிமலைக்கு பக்தர்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
🍒🍒பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ்-க்கு கொரோனா பாதிப்பு. வைரஸ் பீதியால் அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் பரப்புரையை ரத்து செய்தனர் சாண்டர்ஸ், ஜோ பிடன்.
🍒🍒அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த கொடிய நோயால் 26 பேர் உயிரிழந்த நிலையில், 700-க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
🍒🍒இந்தியாவுடனான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இமாசலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவுக்கு தென்னாப்பிரிக்க அணி நேற்று வந்தது.
🍒🍒உயர்கல்வித் தகுதி பெற்றமைக்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தப்படுவதாக பகிரப்படும் தகவல் ஆசிரியர்களுக்குப் பொருந்தாது.
ஏனெனில் ஆசிரியர்கள் பெறும் ஊக்க ஊதிய உயர்வு, அரசாணை நிலை எண்:42 (கல்வி), நாள்: 10-01-1969 ன் படி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வரசாணை கல்வித்துறைக்கு என தனியே வெளியிடப்பட்டது.
ஆகவே, பதற்றமடைய தேவையில்லை.
👉ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் இரத்து என்பது தவறான தகவல் சம்பந்தப்பட்ட அரசாணையின்படி  தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் இளநிலை உதவியாளர், உதவியாளர் போன்ற அரசு ஊழியர்கள் துறைத் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பவானிசாகரில் உள்ள அரசு ஊழியர்கள் அடிப்படை பயிற்சி மையத்தின் மூலம் பயிற்சி பெற்றவர்கள் போன்றவர்களுக்காக Advance Increments இதுவரை வழங்கபட்டு வந்தது. இனி வருங்காலங்களில் இது போன்ற Advance increments வழங்கப்பட மாட்டாது என்று உத்தரவிட்டுள்ளது.
👉இந்த அரசாணையின்படி  ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதியம் Increments பெறுவதற்கு எவ்விதத் தடையும் இல்லை.
🍒🍒போராட்டத்தில் ஈடுபட்ட 7000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்தாகுமா? சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை
🍒🍒தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியானது ஜூன் மாதம் 15-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 30 வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு
🍒🍒எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவித்துள்ளது
🍒🍒ஆசிரியர்களுக்கு விடுமுறை நாள்களில் பயிற்சி. பயிற்சிகளுக்கான  அட்டவணை தயார் செய்து முன்கூட்டியே கொடுக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
🍒🍒வேலூர் மாவட்டத்தில் LKG,UKG வகுப்புக்களை கையாளும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடைபெறும் என அறிவிப்பு
🍒🍒தவறான எண்ணத்தில் தொடுதல், தற்கொலை எண்ணத்தை மாற்ற
அரசுப்பள்ளிகளில் புகார் பெட்டி - கல்வித்துறை உத்தரவு  - நாளிதழ் செய்தி
🍒🍒பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மீது இன்று விவாதம்- கல்வியாளர்கள் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? - நாளிதழ் செய்தி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:

Post a Comment

Please Comment