மார்ச் 23, வரலாற்றில் இன்று.
உலக வானிலை தினம் இன்று.
வானிலையை சீராக வைப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக வானிலை தினம் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. "வாழ்க்கையையும் பொருட்களையும் பாதுகாக்க வானிலையை கண்காணிப்போம்' என்பது இந்தாண்டு இதன் மையக்கருத்தாக உள்ளது.
உலக வானிலை அமைப்பு, 1950ல் துவக்கப்பட்டது. காலநிலை , வானிலை, தண்ணீர் போன்றவற்றில் ஆய்வுகளை மேற்கொள்வதில், ஐ.நா.,வின் சிறப்பு அமைப்பாக, 1951 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அமைப்பில், இந்தியா உட்பட 191 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சுகாதாரம், உணவு, விவசாயம், பாதுகாப்பான தண்ணீர், வறுமை ஒழிப்பு, இயற்கை பேரழிவுகளை தவிர்த்தல் போன்ற பணிகளை இவ்வமைப்பு மேற்கொண்டு வருகிறது.
வானிலை மாறுபடுவதால்:
தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டுமின்றி, மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது இன்றைய தலைமுறைக்கு, சவாலாக திகழ்கிறது. தொழிற்சாலைகளால் காற்றில் (carbon dioxide) கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிக்கிறது. ஓசோன் பாதிப்புக்குள்ளாகி, பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது. தொழிற்சாலைகள் வெளியிடும் (carbon dioxide) கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதில் வளரும் நாடுகளை விட, வளர்ந்த நாடுகளுக்கு தான், அதிக பங்கு இருக்கிறது.
காத்திருக்கும் அபாயம்:
வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாட்டால், வரும் காலத்தில் வறட்சி, வெள்ளப் பெருக்கு, புயல் போன்ற பாதிப்புகளை அடிக்கடி சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். வெப்பம் அதிகரிப்பதால் உலகில் உள்ள பனிப்பாறைகள் உருகி எதிர்காலத்தில் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் நிலப்பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும். மற்ற நாடுகளைப் போல, இந்தியாவும் நாட்டில் உள்ள நதிகளை இணைப்பது குறித்த சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் ஒரு பகுதியில் வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க முடியும்.
பொதுவாக வானிலை வேறு, காலநிலை வேறு என்று மக்கள் எண்ணுவதில்லை.
இன்று காலநிலை சரிஇல்லை என்று சொல்வார்கள். அது தவறு. வானிலை என்பது குறிப்பிட்ட பகுதியில் நீண்ட நாட்களாக உள்ளது.
உதாரணமாக கொடைக்கானலுக்கு ஜனவரி மாதம் சென்றால் அப்போது என்ன வானிலை இருக்கும் என்று சொல்வது கடினம்.
ஆனால் அந்த மாதம் சராசரியாக கம்பளி தேவை என்பது தெரியும்.
நவம்பர் மாதம் சென்னையில் மழை பெய்யும். இது காலநிலை.
அன்று வெப்பம் எவ்வாறு உள்ளது. மழை எவ்வாறு உள்ளது என்பது வானிலை ஆகும்.
பூமியில் சில இடங்கள் பாலைவனமாகவும், சில இடங்கள் அடர்ந்த காடுகளாகவும் உள்ளன.
இதற்கு 3 காரணங்களை கூறலாம்.
1. புவி மையக்கோட்டில் இருந்து அந்த பகுதி இருக்கும் தூரம்,
2. கடலில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது.
3. அந்த பகுதி எவ்வளவு உயரத்தில் உள்ளது ஆகிய மூன்றும் தான் இதை நிர்ணயிக்கின்றன.
சூரியனின் நேர் கிரணங்கள் புவி நடுகோட்டில் செங்குத்தாக விழும்.
நடுகோட்டில் இருந்து நாம் வடக்கிலோ, தெற்கு திசையிலோ செல்லச்செல்ல சாய்கோணத்தில் கிரணங்கள் விழுவதால் வெப்பம் குறையும்.
குறிப்பாக கடகரேகைக்கு வடக்கேயும், மகரரேகைக்கு தெற்கேயும் வெப்பத்தின் அளவு குறைவாக இருக்கும்.
கடலோர பகுதிகளில் வானிலை உட்பகுதிகளை காட்டிலும் மிதமாக இருக்கும்.
உட்பகுதியில் கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும்.
கடல் மட்டத்தில் இருந்து உயரம் செல்லச்செல்ல வெப்பம் குறைவாக இருக்கும்.
இதற்கு காரணம் என்னவென்றால் சூரியனிடம் இருந்து வரும் சிற்றலைகதிர்களை பூமியானது கிரகித்து வெளியிடும் நெட்டலை கதிர்களே ஆகும்.
இந்த நெட்டலை கதிர்களை பூமியில் உள்ள பசுங்குடில் வாயுக்களான நீராவி, பிராணவாயு, கரியமிலவாயு ஆகியவை கிரகிப்பதால் பூமி வெப்பமடைகிறது.
வானிலை மற்றும் காலநிலை விஞ்ஞானமானது வளர்ச்சி பெற்று மக்களுக்கு சேவை செய்வதை,
இந்த உலக வானிலை தினத்தன்று நினைவு கூறலாம்.
No comments:
Post a Comment
Please Comment