நாளை பிளஸ் 2 தேர்வு துவக்கம்; ஜெயித்து காட்டுங்கள் மாணவர்களே.. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நாளை பிளஸ் 2 தேர்வு துவக்கம்; ஜெயித்து காட்டுங்கள் மாணவர்களே..

நாளை பிளஸ் 2 தேர்வு துவக்கம்; ஜெயித்து காட்டுங்கள் மாணவர்களே..




சென்னை: தமிழகம் முழுவதும், நாளை (மார்ச், 2), பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு துவங்குகிறது. தமிழகத்தில் மொத்தம் 8 லட்சத்து, ஆயிரத்து 401 மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.

மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வுகளை இந்த ஆண்டு மாணவர்கள் எழுதுகின்றனர். அதன்படி, மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது.

தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 1.15 வரை நடைபெறும். வினாத்தாளை வாசிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. நாளை துவங்கி, மார்ச் 24ம் தேதி தேர்வுகள் முடிவடையும். 

ஏப்ரல் 24-ம் தேதி ரிசல்ட் வெளியாகும். இதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் உயர்படிப்புக்கு செல்ல முடியும்.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு...

* தேர்வுக்கு முதல் நாள் நள்ளிரவு வரை படிக்க வேண்டாம். அதிகாலையில் எழுந்து படியுங்கள். அப்போது தான் பாடம் மனதில் பதியும்

* இதுவரை படிக்காத பாடங்களை படிக்காமல், படித்த பாடங்களை மீண்டும் நன்றாக படித்தால் நேரம் வீணாகாது.

* உடல்நிலையை நன்றாகக் கவனித்து கொள்ளுங்கள். தேவையற்ற பிரச்னைகளை சிந்திக்க வேண்டாம்.

* அரைமணி நேரத்திற்கு முன் தேர்வு மையத்திற்கு சென்றுவிடுங்கள்.

* தேர்வுக்கு தேவையான பொருட்கள், ஹால் டிக்கெட்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். ஏற்கனவே பயன்படுத்திய பேனாவை எடுத்து செல்லுங்கள்.

* நன்கு தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள்.

* ஆசிரியர், பெற்றோர் கூறிய அறிவுரைகளை மனதில் நினைத்து தேர்வு எழுதுங்கள்.

* தேர்வு எழுதும் போது பதட்டம் வேண்டாம்

* எழுதி முடிந்த பின் பிழை உள்ளதா, கேள்வி எண்ணை சரியாக எழுதி உள்ளீர்களா என பாருங்கள்.வெற்றி உங்கள் வசமாகும். வாழ்த்துகிறோம்...கல்விப்பணியில் தினமலர்


Plus 2 exam launch tomorrow; Win the students ..


CHENNAI: All over Tamil Nadu, tomorrow (March 2), plus 2 government elections will begin. A total of 8 lakhs and 401 students in Tamil Nadu are sitting for the General Elections. Accordingly, a total of 600 marks will be selected. 

The exams will start at 10 am and will continue till 1.15 pm. An additional 15 minutes is allotted to read the questionnaire.The exams start tomorrow and end on March 24th. The Result will be released on April 24. For those who write the exam ... 

* Do not read till midnight on the first day of the exam. Get up early in the morning and read. It is only then that the lesson will come to mind. Do not think of unnecessary problems. 

* Go to the exam center before half-time.

* Take the ingredients for the selection and not forget the hall ticket. Take the pen already in use. 

* Answer the familiar questions first. 

* Take the advice of the teacher and the parents in mind. Congratulations to ...

No comments:

Post a Comment

Please Comment