தொலைபேசி கட்டணம் கட்ட மார்ச் 31 வரை அவகாசம்
பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி நிறுவனம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பிஎஸ்என்எல் தரைவழி தொலைபேசி, பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் மொபைல் ஆகியவற்றுக்கான மாதக் கட்டணம் செலுத்த கடந்த 22-ம் தேதி கடைசி நாளாகும்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, இக்கட் டணத்தை செலுத்துவதற்கான கடைசி தேதி வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, வாடிக்கையாளர் கள் தங்களது கட்டணத்தை https://portal.bsnl.in என்ற இணைய தளம் மற்றும் My BSNL என்ற செயலி ஆகியவற்றின் மூலம் செலுத்துமாறு அறிவுறுத்தப் படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment