தங்கம் பவுன் ரூ.32 ஆயிரத்தை மீண்டும் தாண்டியது - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தங்கம் பவுன் ரூ.32 ஆயிரத்தை மீண்டும் தாண்டியது

தங்கம் பவுன் ரூ.32 ஆயிரத்தை மீண்டும் தாண்டியது 

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் ஒரு பவுன் மீண்டும் ரூ.32 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.152 உயர்ந்து 32 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

 சர்வதேச அளவில் பெரும் பாலான நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால், உள்ளூரிலும் தங்கத்தின்விலை உயர்ந்து வருகிறது. 

இது வரையில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை அடிக்கடி புதிய உயர்வையும் தொட்டு வருகிறது. இருப்பினும், கடந்த சில நாட் களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை நேற்று திடீரென உயர்ந்து காணப்பட்டது. சென்னையில் 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.32,040-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.4,005-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3,986-க்கு விற்கப்பட்டது.

No comments:

Post a Comment

Please Comment