360 நாட்கள் வேலிடிட்டியுடன் ஜியோ புதிய திட்டம் அறிமுகம்
360 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய ரீசார்ஜ் திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.
இந்தப் புதிய பிரிபெய்டு திட்டத்தில் 360 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ரீசார்ஜ் கட்டணம் ரூ4,999 ஆகும்.
இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 350 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா வரம்பு கிடையாது. தொடர்ச்சியாக 350 ஜிபியை உபயோகிக்கலாம். 350 ஜிபி தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 64 கேபியாக குறைக்கப்பட்டுவிடும்.
இத்துடன் ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 12,000 நிமிடங்கள் வாய்ஸ் கால் சலுகை வழங்கப்படுகிறது.இவைதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் வசதி மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ ரூ.2121 கட்டணத்தில் புத்தாண்டு சலுகையை அறிமுகப்படுத்தியது. இதில் 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. பலன்களை பொருத்தவரை தினமும் 1.5 ஜிபி டேட்டா, ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்,
மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 12,000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.
இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
Jio launches new project with 360 days validity
Reliance Jio has announced a new recharge plan with 360 days validity. The new Prepaid Plan offers 360 days of validity. The recharge fee for this scheme is Rs 4,999. The plan provides customers with a total of 350 GB of data. There is no daily data limit. You can use 350 GB continuously. When 350 GB is exhausted, the data speed is reduced to 64 KB. In addition, Unlimited Voice Call for Jio Numbers and 12,000 Minute Voice Call offer for non-Jio network users.
In addition to this, 100 SMS is provided daily, including subscription for free use of Geo processors. Earlier, Reliance Jio launched the New Year offer at Rs. It offers 336 days of validity. 1.5 GB of data per day, Unlimited Voice Call for Geo numbers and 12,000 minutes for other network numbers. It also offers a free subscription to 100 SMS and Geo processors daily.

No comments:
Post a Comment
Please Comment