ஒரு நிமிடத்தில் 50 மருத்துவ பிரிவுகளை கூறி ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த மாணவி !
மருத்துவ விஞ்ஞானத்தில் 50 பிரிவுகளை கண்டறிந்து பதில் கூறிய 4-ம் வகுப்பு மாணவி ருவந்திகா மாரிக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய, வியட்நாம் லாவோஸ் நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள இளம் சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சாதனையாளர்களை ஒப்பிட்டுப் பார்க்கவும் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறும் இளம் சாதனையாளர்களுக்கு
ஆசியா சாதனையாளர்கள் புத்தகம் சார்பில் இளம் சாதனையாளர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதன் மூலம் இளம் சாதனையாளர்களிடம் கண்டறியப்படாத அறிவையும், திறமையையும் இந்த உலகம் அறியச்செய்யும் வகையில் புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.
ஆசியா சாதனையாளர் புத்தகம் என்பது உலக சாதனையாளர்கள் பல்கலைக்கழகத்தின் ஒரு சார்பு நிறுவனம் ஆகும்.ஆசிய சாதனையாளர் புத்தகம் நிறுவனம் சார்பில் சென்னை பெருங்குடியில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் இளம் சாதனையாளருக்கான போட்டி நடத்தப்பட்டது.
நடுவர் விவேக் நாயர் முன்னிலையில் நடை பெற்ற இந்த போட்டியில் ருவந்திகா மாரி என்ற 4-ம் வகுப்பு மாணவி கலந்து கொண்டு ஒரு நிமிடத்தில் கம்ப்யூட்டரில் காட்சிப்படுத்தப்பட்ட மருத்துவ விஞ்ஞான 50 பிரிவுகளை சரியாக கண்டறிந்து பதில் அளித்துள்ளார்.
இதையொட்டி மாணவி அனைவரின் பாராட்டையும் பெற்றார். அதைத்தொடர்ந்து மாணவிக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீபா செய்திருந்தார்.
50 Minutes in One Minute's Asian Adventure Book!
Ruwanthika Mari, a 4th grade student who has identified 50 sections of medical science, has been awarded the Young Achievement Award. Young Achievers in India, Vietnam, Laos, Nepal This gives new achievements to the world of unrecognized knowledge and skills to young achievers.Asia Achievement Book is a non-profit affiliate of the World Achievements University.
The Young Achievement Competition was held at Indian Public School, Perungudi, Chennai on behalf of the Asian Achievement Book Company. Rivantika Mari, a 4th grade student participated in the contest in the presence of referee Vivek Nair. In turn, the student received all the praise. The student was subsequently awarded the Young Achievement Award. Siba had made arrangements for the event.

No comments:
Post a Comment
Please Comment